Saturday, September 27, 2008

சீன விண்வெளி வீரர் விண் நடை போட்டார்.



சீன விண்வெளி வீரர் விண்ணில் நடைபயிலும் காட்சி.

சீனா சில நாட்களுக்கு முன்னர் 3 விண்வெளி வீரர்களை அதன் Shenzhou VII கலம் மூலம் March II-F உந்துவாகனத்தின் துணையுடன் விண்வெளிக்கு அனுப்பி வைத்திருந்தது.

அந்த வீரர்களில் சீன விமானப்படை வீரரும் சீன விண்வெளி வீரருமான 42 வயதுடைய Zhai Zhigang விண்வெளியில் 15 நிமிடங்கள் நடைபயில்வதையும் அவர் சீனக் கொடியை விண்வெளியில் அசைக்கும் காட்சிகளையும் சீனத் தொலைக்காட்சி ஒளிபரப்பியுள்ளது.

உலகில் ரஷ்சியா, அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளுக்குப் போட்டியாக ஆசிய நாடான சீனா விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி சாதனை செய்துள்ளது.

இச்சாதனை ஆசியாவில் ஜப்பான் மற்றும் இந்தியாவும் சீனாவுடன் விண்வெளித் தொழில்நுட்பத்தில் போட்டிபோட வைக்கும். அது மனித இனத்துக்கு பாதகமற்ற வகையில் உபயோகமாக அமையின் வரவேற்கத்தான் வேண்டும்.

மேலதிக தகவலும் கானொளியும்.

Labels: , ,

பதிந்தது <-குருவிகள்-> at 3:10 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க