Wednesday, October 22, 2008

சந்திராயன்-1 (Chandrayaan 1) சந்திரனை நோக்கி வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.1 - Chandrayaan Energetic Neutral Analyzer (CENA)
2 - Moon Impact Probe (MIP)
3 - Radiation Dose Monitor (RADOM)
4 - Terrain Mapping Camera (TMC)
5 - Moon Mineralogy Mapper (M3)
6 - Chandrayaan 1 X-ray Spectrometer (C1XS)
7 - Solar Panel

சந்திராயன் -1 விண்கலமும் அதன் பிரதான பாகங்களும்.

இந்திய நேரப்படி இன்று (22-10-2008) காலை 6.20 வாக்கில் இந்தியாவின் தென் மாநிலங்களில் ஒன்றான ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள சிறிகரிகோட்டா (Sriharikota) எனும் இடத்தில் உள்ள விண்கல ஏவுதளத்தில் இருந்து (Satish Dhawan Space Centre ) பி.எஸ்.எல்.வி -சி11 (Polar Satellite Launch Vehicle (PSLV-C11) எனும் உந்துவாகனத்தின் உதவியுடன் சுமார் ஒன்ரரை தொன் எடையுள்ள சந்திராயன் - 1ம் அதனுடன் இணைந்த 30 கிலோகிராம் எடையுள்ள சந்திரனில் இறங்கு கலமும் (Moon Impact Probe (MIP)) வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன.

இந்த சந்திராயன் -1 திட்டத்தின் முதன்மை நோக்கம் சந்திரனின் துருவத்தின் மேற்பரப்பில் அல்லது மேற்பரப்பின் கீழ் பனிப் படிவுகள் உள்ளனவா என்று ஆராய்வதும், பூமியில் அரிதாக காணப்படுவதும் ஆனால் அணுக்கரு மின் உற்பத்திக்கு பயன்படக் கூடியதுமான கீலியம் 3 சமதானி (Helium 3, isotope) சந்திரனில் அதிக அளவில் இருக்கிறதா என்று கண்டறிய முயல்வதுடன் சந்திரனைப் பற்றிய அங்குள்ள தரைத்தோற்றம் மற்றும் கனிமங்கள் தொடர்பிலான முப்பரிமான atlas ஒன்றை உருவாக்கத்தக்க வகைக்கு அனைத்துத் தகவல்களையும் திரட்டுவதுமாகும்.

சந்திராயன் -1 ஏவப்பட்டதில் இருந்து 11 நாட்கள் காலப்பகுதியில் சந்திரனை 1000 தொட்டக்கம் 100 கிலோமீற்றர்கள் வரை மிக நெருங்கி அணுகி நீள்வட்டப் பாதையில் சுற்றி ஆய்வுகளைச் செய்து கொண்டிருக்கும் அதேவேளை சந்திரனில் இறங்கு கலத்தை (Moon Impact Probe (MIP)) சந்திரனில் இறங்கி அதன் மூலம் சந்திரனின் வளிமண்டலம் மற்றும் தரைத்தோற்றம் பற்றிய ஆய்வுகளையும் செய்யவுள்ளது.

சந்திராயன் -1 திட்டம் மூலம் 2 ஆண்டுகள் காலத்துக்கு ஆய்வுகளைச் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

சந்திராயன் -1 கலத்தில் பல ஆய்வுநிலை உபகரணங்கள் அதன் ஆய்வுப் பணிக்காகப் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றில் கிட்டத்தட்ட பாதி உள்ளூர் உற்பத்திகளாகும். பிற வெளிநாட்டு உற்பத்திகளாகும். சந்திராயன் -1 தனி ஒரு சூரிய மின்கலத்தகடு கொண்டு சுமார் 700 Watts மின்னைப் பிறப்பித்து அதன் மூலம் இயங்கவுள்ளது.

சுமார் 78 மில்லியன் டாலர்கள் செலவில் செய்யப்படும் சந்திராயன் -1 ஆய்வுத்திட்டம் சில தரப்புக்களால் வரவேற்கப்படவில்லை. காரணம் இந்தியாவில் பல மில்லியன் மக்கள் அடிப்படை வசதிகள் இன்றி வாழ்ந்து வரும் நிலையில் பல கோடி டொலர்களை விழுங்கும் இத்திட்டங்கள் அவசியமா என்றும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

எனினும் ஆசிய பிராந்தியத்தில் சீனா - ஜப்பான் - இந்தியா என்ற முத்தரப்பும் போட்டா போட்டுக் கொண்டு விண்ணை ஆக்கிரமிக்க ஆரம்பித்திருப்பது விண்வெளிக்கான போட்டா போட்டி மேற்குலகிடமிருந்து ஆசியாவின் கைகளுக்கு மாறிவிட்டதோ என்ற எண்ணத்தையே தோற்றிவித்துள்ளது.

எதுஎப்படி இருப்பினும்... இந்தப் போட்டா போட்டியால் அறிவியல் உலகுக்கு பல நல்ல சங்கதிகள் கிடைக்கும் என்பது மட்டும் தெளிவு.

மேலதிக தகவல் மற்றும் கானொளி இங்கு.

Labels: , ,

பதிந்தது <-குருவிகள்-> at 4:09 am

3 மறுமொழிகள்:

Blogger நா. கணேசன் விளம்பியவை...

இந்திய விண்கலனின் பெயர்
சந்த்ரயான் என்பதாகும்.
அதன் பொருளை விளக்கம்,
http://nganesan.blogspot.com/2008/10/candra-yaanam.html

நன்றி,
நா. கணேசன்

Sun Nov 09, 02:36:00 pm GMT  
Blogger நா. கணேசன் விளம்பியவை...

இந்திய விண்கலனின் பெயர்
சந்த்ரயான் என்பதாகும்.
அதன் பொருள் விளக்கம்,
http://nganesan.blogspot.com/2008/10/candra-yaanam.html

நன்றி,
நா. கணேசன்

Sun Nov 09, 03:15:00 pm GMT  
Blogger kuruvikal விளம்பியவை...

நன்றி நா.கணேசன் அவர்களே. உங்கள் திருத்தம் எதிர்காலத்தில் கவனத்தில் கொள்ளப்படும்.

தமிழ் உச்சரிப்பில் தவறுகள் நேரலாம் என்பதாலேயே ஆங்கிலப்பதமும் இணைத்துத் தரப்பட்டுள்ளது. சுட்டியிலும் ஆங்கிலப் பதம் அளிக்கப்பட்டுள்ளது.

எதுஎப்படியோ உங்கள் தகவல் திருத்ததுக்கு உதவியாக அமையும். மீண்டும் நன்றிகள்.

குருவிகள்.

Sun Nov 09, 10:34:00 pm GMT  

Post a Comment

இந்த இடுகைக்கு மேலதிக தொடுப்புச் செய்ய:

Create a Link

<<முகப்புக்குச் செல்க