Thursday, October 30, 2008

2004 இல் ஏற்பட்ட சுனாமி பிராந்தியத்தின் முதற் சுனாமி அல்ல - ஆய்வு



2004ம் ஆண்டு மார்க்கழித் திங்கள் 26ம் நாள் இந்தோனிசிய சுமாத்திராத் தீவுகளில் ஏற்பட்ட கடலடிப் பூகம்பத்தின் விளைவாக தோன்றிய சுனாமி இந்து சமுத்திரத்தில் குறிப்பாக இந்திய உபகண்டம் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட முதற் பெரிய ஆழிப்பேரலை தாக்கம்(சுனாமி) அல்ல என்றும் ஏலவே முன்னரும் அவ்வாறான பெரிய சுனாமிகள் தோன்றிருக்கின்றன என்றும் தாய்லாந்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். (ஏலவே சில தமிழ் இலக்கியக் குறிப்புக்களிலும் இப்பிராந்தியத்தில் முன்னரும் சுனாமி தோன்றியதற்கான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றிருந்தன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.)

குறிப்பாக 2004ம் ஆண்டு ஆழிப்பேரலைத் தாக்கத்துக்கு உள்ளான பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தரைத்தோற்ற பாறைப் படிவாராய்சியில் இன்றைய காலத்தில் இருந்து சுமார் 600 தொடக்கம் 700 ஆண்டுகளுக்கு முன்னரும் இதே போன்ற பெரிய சுனாமி ஏற்பட்டிருக்கிறது என்று கண்டறிந்துள்ளனர். சுனாமித் தாக்குத்துக்குள்ளான பகுதிகளில் காணப்பட்ட படிவுப் பாறைகளில் உள்ள படிவுகளின் தன்மைகள் மீது செய்யப்பட்ட அவதானிப்பில் இருந்தே இக்கண்டறிதல் செய்யப்பட்டுள்ளது.

பெரும் சுனாமிகள் ஏற்படும் போது பெருமளவிலான மணற்படிவுகள் ஏற்படுத்தப்பட்டிருப்பது படிவுப்பாறைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அவதானிக்கப்பட்டுள்ளது.அத்துடன் கதிர்ப்புக் காபன் வயதறிதல் அறிவு கொண்டு படிவுப்பாறைகளில் காணப்பட்ட அசாதாரண மணற்படிவுகளில் மேற்கொள்ளப்பட்ட கணிப்பீட்டில் இருந்து சுனாமிகள் கிட்டத்தட்ட 600 ஆண்டுகள் என்ற ரீதியில் மீள ஏற்படும் ஒழுங்கைக் காண்பிப்பனவாக இருக்கின்றன என்றும் கண்டறிந்த்துள்ளனர்.

குறித்த ஆய்வில் 600 - 700 ஆண்டுகளுக்கு முன்னரும் கிட்டத்தட்ட 1200 ஆண்டுகளுக்கு முன்னரும் 2000 ஆண்டுகளுக்கு முன்னரும் என்று சுனாமிகளால் ஏற்பட்டவை என்று கருதத்தக்க பெரிய மணற்படிவுகள் படிவுப்பாறைகளில் அவதானிக்கப்பட்டுள்ளன.

மேலதிக தகவல் இங்கு.

Labels: , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 7:16 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க