Thursday, October 09, 2008

வேற்றுக்கிரக வாசிகளுக்கு பூமியில் இருந்து வலைவீச்சு.



சுமார் 20 ஒளியாண்டுகளுக்கு அப்பால் மதிநுட்ப உயிரினங்கள் இருக்கலாம் என்று கருதத்தக்க கோள் ஒன்றை நோக்கி பூமியில் இருந்து தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இத்தகவல் குறித்த கோளை 2029 ஆண்டு வாக்கில் சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுவதோடு அங்கு மதிநுட்ப உயிரினங்கள் இருக்கும் பட்சத்தில் மனிதன் பூமியில் இருந்து அனுப்பியுள்ள தகவலுக்கு பதில் தகவல் கிடைக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பதில் தகவல் கிடைக்க இன்றிலிருந்து மொத்தமாக 40 ஆண்டுகள் காலம் காத்திருக்க வேண்டி இருக்கும்.

பூமியில் இருந்து அனுப்பப்பட்டுள்ள தகவலில் சுமார் 501 புகைப்படங்கள், வரைபடங்கள் மற்றும் எழுத்துரு தகவல்கள் உள்ளடங்கி இருக்கின்றன. இத்தகவல் கொத்து உக்கிரைனில் உள்ள பழைய சோவியத் கால உபகரணங்களைப் (giant radio-telescope) பயன்படுத்தி அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மேலதிக தகவல் இங்கு.

Labels: , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 12:45 pm

1 மறுமொழிகள்:

Anonymous Anonymous விளம்பியவை...

இங்க உள்ளவையால உள்ள பிரச்சனை காணாது என்று ஏலியனையும் கூப்பிடப் போகினமாமோ?

Fri Oct 10, 08:02:00 am BST  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க