Saturday, October 25, 2008

மூலவுயிர்க்கலத்தில் இருந்து சுக்கிலச் சுரப்பி முழுமையாக வளர்க்கப்பட்டுள்ளது.



ஆண்களின் இனப்பெருக்கத் தொகுதியில் விந்தணுவை உடலுக்கு வெளியே காவி வரும் சுக்கிலப் பாய்பொருளைச் சுரக்கும் சுக்கிலச் சுரப்பி அல்லது prostate சுரப்பி புற்றுநோய்த் தாக்கத்துக்கு அதிகம் உள்ளாகி வருவது குறிப்பாக வயதான ஆண்களில் பெருமளவு மரணத்துக்கு காரணமாக அமைகிறது.

இந்த நிலையில் எலிகளில் சுக்கிலச் சுரப்பியின் மூலவுயிர்க் கலத்தில் (stem cell ) இருந்து புதிய சுக்கிலச் சுரப்பியை விஞ்ஞானிகள் வளர்த்து எடுத்துள்ளனர்.

இக்கண்டுபிடிப்பானது, உண்மையில் எவ்வாறு மூலவுயிர்க் கலங்களில் இருந்து சாதாரண சுரப்பிக்குரிய கலங்களும் மற்றும் புற்றுநோய்க்கலங்களும் உருவாகின்றன என்பதை விளங்க மற்றும் விளக்கப் பெரிதும் உதவுவதோடு, எதிர்காலத்தில் புற்றுநோயால் பாதிப்படையும் prostate சுரப்பிக்கு எவ்வகையான சிகிச்சையை வழங்கலாம் என்பது தொடர்பில் தீர்மானிக்கவும் உதவும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இருப்பினும் வயதான ஆண்களில், புதிதாக வளர்க்கப்பட்ட சுரப்பியை சிக்கலான அறுவைச் சிகிச்சை மூலம் மீள நாட்டுதல் என்பது வயதான காலத்தில் அவர்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக அமையும் என்பது விமர்சனத்துக்குரிய ஒன்றாகவே இருக்கிறது.


மேலதிக தகவல் இங்கு.

Labels: , ,

பதிந்தது <-குருவிகள்-> at 10:51 pm

1 மறுமொழிகள்:

Anonymous Anonymous விளம்பியவை...

It is very useful messages.thank you.

Sat Nov 08, 03:35:00 am GMT  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க