Sunday, October 26, 2008

மிகையொலி வேகக் கார்.



விண்ணில் பறக்கும் விமானங்களில் குறிப்பாக போர் விமானங்களில் ஒலியை விடப் பல மடங்கு வேகத்தில் பறந்து தாக்குதல் நடத்தும் மிகையொலி (Supersonic) விமானங்களை உலகின் பல பகுதிகளிலும் கண்டிருக்கிறோம். ஆனால் தரையில் மகிழூர்திகளில்(கார்கள்) மிகையொலி மகிழூர்திகள் 1997 இல் தான் அவற்றின் உலக சாதனை வேகத்தைக் கடந்திருந்தன.

பிரிட்டன் பொறியியலாளர் குழுவென்றின் முயற்சியில் உருவான மிகையொலி மகிழூர்தியை, 1997 இல் பிரித்தானிய விமானப்படை வீரர் ஒருவர் சுமார் 1228 கிலோமீற்றகள்/ மணித்தியாலம் என்ற வேகத்தில் செலுத்தியமையே உலக சாதனைக்குரியதாக இன்றும் விளங்குகிறது. ஆனால் தற்போது அதே குழுவினர் தமது சொந்தச் சாதனையை முறியடித்து மிகையொலி மகிழூர்தி ஒன்றை 1610 கிலோமீற்றர்கள்/மணித்தியாலம் என்ற வேகத்தில் செலுத்தி சாதனை செய்ய உள்ளனர்.

முன்னைய மகிழூர்தியில் SSC (Super Sonic Car) ஜெட் இயந்திரத்தைப் பாவித்திருந்தனர். தற்போதைய புதிய வடிவமைப்பு மிகையொலி மகிழூர்தியில் Eurofighter எனப்படும் ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் முக்கிய தாக்குதல் விமானமாகத் திகழும் மிகையொலி விமானத்தின் ஜெட் இயந்திரத்தை ஒத்த இயந்திரத்தைப் பாவிக்க உள்ளனர்.

Bloodhound எனப்படும் இத்திட்டத்தின் கீழ் தயாருகும் இம்மகிழூர்த்தி சுடப்பட்ட நிலையில் பறக்கும் கைத்துப்பாக்கி சன்னத்தை விட அதிக வேகத்தில் தரையில் ஓட இருக்கிறது. இச்சாதனையோட்டம் 2011 வாக்கில் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலதிக தகவலும் கானொளியும் இங்கு.

Labels: , ,

பதிந்தது <-குருவிகள்-> at 8:17 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க