Thursday, October 09, 2008

முன் சுக்கிலப் பாய்ச்சல் மரபணுப் பிரச்சனையும் கூட; முற்றிலும் உளவியல் அல்ல.



உடலுறவின் போது சில ஆண்களில் விந்து அடங்கிய சுக்கிலப் பாய்பொருள் வெளியேற்றம் என்பது துரிதமாக நிகழ்வதற்கு (premature ejaculation) அவ்வாண்கள் கொண்டுள்ள மரபணுவும் காரணம் என்று நவீன ஆய்வு கண்டறிந்துள்ளது.

இதுவரை காலமும் ஆண்கள் மத்தியில் நிலவும் உளவியல் பாதிப்பே இதற்கு முழுமைக் காரணமாக கற்பிக்கப்பட்டு வந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். உளவியல் காரணிகளோடு மரபணுக் காரணியும் இணைந்திருப்பது தற்போதே கண்டறியப்பட்டுள்ளது.

குறிப்பாக serotonin எனும் ஓமோனின் அளவுக் கட்டுப்பாட்டோடு தொடர்புடைய ஜீன் ஒன்றே ஆண்களில் மேற்குறிப்பிட்ட நிலைக்குக் காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

serotonin இன் செயற்பாடு மூளையில் சுக்கிலப் பாய்பொருள் வெளியேற்றத்தோடு தொடர்புடைய பகுதியில் உள்ள நரம்புக்கலங்களில் குறைந்திருப்பதே வழமைக்கு மாறாக சுக்கிலப் பாய்பொருள் விரைந்து வெளியேறக் காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது.

எதிர்காலத்தில் ஆண்கள் மத்தியில் இருக்கும் இந்த நிலையை மரபணு சிகிச்சை (gene therapy) முறைகள் கொண்டு தீர்க்க இக்கண்டுபிடிப்பு உதவும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.

மேலதிக தகவல் இங்கு.

--------------



இதற்கிடையே பெண்களில் மார்பகப் புற்றுநோய் தோன்றுவதை aspirin மற்றும் ibuprofen போன்ற வலி நிவாரணிகள் வெகுவாகக் குறைப்பதாக சுமார் 2.7 மில்லியன் பெண்கள் மத்தியில் இருந்து பெறப்பட்ட அவதானிப்புக்களின் படி கண்டறியப்பட்டுள்ளது.

இதில் aspirin 13% ஆலும் ibuprofen 20% ஆலும் பெண்களில் மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதை கட்டுப்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது.

எதுஎப்படி இருப்பினும் நீண்ட காலத்துக்கு வலி நிவாரணிகளை உள்ளெடுத்தல் வேறு பல பாதகமான பக்க விளைவுகளை உருவாக்கும் என்றும் எச்சரிக்கின்றனர் ஆய்வாளர்கள்.

மேலதிக தகவல் இங்கு.

Labels: , ,

பதிந்தது <-குருவிகள்-> at 3:49 pm

3 மறுமொழிகள்:

Blogger கூடுதுறை விளம்பியவை...

நல்ல விசயம்

இது எனது புதிய பதிவு...வருகைதாருங்கள்
http://paakeypa.blogspot.com/

Thu Oct 09, 04:19:00 pm BST  
Blogger சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) விளம்பியவை...

நல்ல பதிவு...

சிறந்த முயற்சி...

வாழ்த்துககள்...

Thu Oct 09, 05:42:00 pm BST  
Blogger kuruvikal விளம்பியவை...

புதிய வலைப்பதிவு பயனர்களான கூடுதுறை மற்றும் சுடர்மணி ஆகியோரை வரவேற்பதில் மகிழ்ச்சி.

கூடுதுறை உங்கள் தளமும் பார்த்தேன். நல்ல முயற்சி.. தொடருங்கள்.

சுடர்மணி.. உங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் உற்சாகமூட்டலுக்கும் நன்றிகள் பல.

Thu Oct 09, 09:40:00 pm BST  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க