Monday, October 06, 2008

HPV வைரஸை இனங்கண்டதற்கு நோபல் பரிசு.



பெண்களில் கருப்பைக் கழுத்துப் பகுதியில் புற்றுநோயைத் தோற்றுவிக்கும் எச் பி வி வைரஸ்.

2008ம் ஆண்டுக்கான மருத்துவத்துறை சார்ந்த நோபல் பரிசு பிரான்ஸ் (Françoise Barré-Sinoussi and Luc Montagnier ) மற்றும் ஜேர்மனிய (Harald zur Hausen) ஆய்வாளர்களிடையே பங்கிடப்படுகின்றன.

எயிட்ஸ் நோய்க்குரிய எச் ஐ வி வைரஸினைக் கண்டறிந்ததுடன் அதன் தொழிற்பாடுகள், தொற்றல் தன்மைகள் தொடர்பில் விளக்கியதற்காக இரண்டு பிரான்ஸ் ஆய்வாளர்களுக்கும் பெண்களில் கருப்பைக் கழுத்துப் பகுதியில் தோன்றும் புற்றுநோய்க்குக் (cervical cancer) காரணமான எச் பி வி (human papillpoma virus (HPV)) வைரஸை இனங்கண்டு கொண்டதற்காக ஜேர்மனிய ஆய்வாளருக்கும் இவ்வாண்டுக்கான மருத்துவத்துறை நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

எச் பி வி வைரஸின் கண்டுபிடிப்பே பெண்களிடையே பெருமளவில் மரணத்தை ஏற்படுத்தும் புற்றுநோய்களில் இரண்டாம் இடத்தில் உள்ள கருப்பைக் கழுத்து புற்றுநோய்க்கு எதிராக vaccines (தடுப்பூசிகளை) உருவாக்க உதவியுள்ளது. இது எதிர்காலத்தில் பல இளம் பெண்கள் மேற்குறிப்பிட்ட நோயினின்றும் பாதுகாப்புப் பெற வழிவகை செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலதிக தகவல் இங்கு.

Labels: , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 11:17 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க