Tuesday, November 04, 2008

சந்திராயன் 1 அனுப்பிய பூமி பற்றிய படங்கள்.



கடந்த ஐப்பசி திங்கள் 22ம் நாள் சந்திரனை நோக்கி விண்ணில் ஏவப்பட்ட இஸ்ரோவின் சந்திராயன் 1 விண்கலம் பூமியின் மேற்பரப்பில் இருந்து முறையே 9000 மற்று 70,000 கிலோமீற்றர்களுக்கு அப்பாலிருந்து அவுஸ்திரேலியாவின் வடக்கு மற்றும் மேற்குக் கரை உள்ளடங்கிய பூமிப் பந்தின் சில பகுதிகளைப் படம்பிடித்து அனுப்பியுள்ளது.

இந்த சந்திராயன் விண்கலம் இன்னும் சில தினங்களில் சந்திரனை மிக நெருங்கி அதனை நீள்வட்டப்பாதையில் சுற்றி வரும் அதேவேளையில் சந்திரனின் மேற்பரப்புப் பற்றிய முப்பரிமானப் படங்களை எடுத்து அதனடிப்படையில் சந்திரனில் உள்ள கனிமங்களின் பரம்பல் பற்றிய வரைபடத்தை தயாரிக்க உதவவுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.



மேலதிக தகவல் இங்கு.

Labels: , ,

பதிந்தது <-குருவிகள்-> at 3:18 pm

2 மறுமொழிகள்:

Blogger கோவி.கண்ணன் விளம்பியவை...

படங்களுக்கு நன்றி, நான் இதைத் தேடிக் கொண்டு இருந்தேன்.

Sat Nov 08, 03:25:00 am GMT  
Blogger kuruvikal விளம்பியவை...

நன்றி கண்ணா தங்கள் பின்னூட்டலுக்கு.

Sun Nov 09, 07:22:00 am GMT  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க