Sunday, November 09, 2008

நிலவின் சுற்றுப்பாதையில் சந்திராயன்-1



நிலவின் சுற்றுப்பாதையில் சந்திராயன்-1 வெற்றிகரமாக நுழைந்துள்ளது. இதன் மூலம் விண்வெளி வரலாற்றில் இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது.

முற்றிலும் இந்தியத் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஆள் இல்லாத சந்திராயன் -1 விண்கலம் கடந்த அக்டோபர் 22ம் தேதி பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.

இதன் மூலம் உலக விண்வெளி வரலாற்றில் இந்தியாவுக்கு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இடம் கிடைத்தது. இந்த நிலையில், தற்போது புவி ஈர்ப்பு விசைப் பகுதியைக் கடந்து நிலவின் சுற்றுப்பாதையில் சந்திராயன்-1 வெற்றிகரமாக நுழைந்துள்ளது.

பெங்களூரில் உள்ள இஸ்ரோவின் டெலிமெட்ரி, டிராக்கிங் மற்றும் கமாண்ட் கட்டமைப்பின், சந்திராயன்-1 விண்கல கட்டு்பாட்டு மையத்தில், இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது.

நேற்று மாலை 4.51 மணியளவில், சந்திராயன் விண்கலத்தில் உள்ள திரவ எரிபொருள் என்ஜினை, 817 விநாடிகளுக்கு விஞ்ஞானிகள் இயக்கி, சந்திராயன் விண்கலத்தை நிலவின் சுற்றுப்பாதையில் செலுத்தினர்.

மிக மிக கவனத்துடன் செய்யப்பட வேண்டிய பணி இது. கொஞ்சம் அழுத்தம் அதிகமானாலும் கூட விண்கலம் சேதமடைந்து விடும் என்பதால் மிக மிக கவனமாக இப்பணியை விஞ்ஞானிகள் மேற்கொண்டனர்.

திட்டமிட்டபடி இப்பணி முடிந்ததால் விஞ்ஞானிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதன் மூலம் நிலவின் சுற்றுப்பாதைக்குள் விண்கலத்தை வெற்றிகரமாக அனுப்பியுள்ள நாடுகள் வரிசையில், இந்தியாவும் இணைந்துள்ளது.இதற்கு முன்பு அமெரிக்கா, சோவியத் யூனியன், ஜப்பான், சீனா ஆகிய நாடுகளும், ஐரோப்பிய விண்வெளிக் கழகமும் நிலவுக்கு விண்கலங்களை அனுப்பியுள்ளன.

தற்போது சந்திராயன் விண்கலம் நிலவிலிருந்து 500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. நீள்வட்டப் பாதையில் நிலவை சுற்றி வருகிறது சந்திராயன்-1. நவம்பர் 11ம் தேதி, சந்திராயன் -1 விண்கலத்தில் உள்ள மூன் இம்பாக்ட் பிராப், நிலவில் தரையிறங்கும்.

தகவல்: தற்ஸ்தமிழ்.கொம்

மேலதிக தகவல் இங்கு.

Labels: , ,

பதிந்தது <-குருவிகள்-> at 7:32 am

2 மறுமொழிகள்:

Blogger ராஜ நடராஜன் விளம்பியவை...

படத்துடன் செய்திக்கு நன்றி.

Sun Nov 09, 09:45:00 am GMT  
Blogger kuruvikal விளம்பியவை...

தங்கள் வருகைக்கும் நன்றிகள். :)

Sun Nov 09, 10:29:00 am GMT  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க