Sunday, November 02, 2008

சிறுவர்களில் மூளைப் புற்றுநோயை தோற்றுவிக்கும் மரபணு அலகு கண்டுபிடிப்பு.



பிரித்தானிய கேம்பிரிஷ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் சிறுவர்கள் மத்தியில் மூளையில் ஏற்படும் புற்றுநோய்க்கு அநேகம் காரணமாக விளங்கும் மரபணு அலகை (gene) கண்டறிந்துள்ளனர்.

இந்த மரபணு அலகானது மரபணு அலகுகளின் இணைவால் உருவாகும் ஒரு fusion gene என்று கண்டறியப்பட்டுள்ளதுடன் எதிர்காலத்தில் இந்த மரபணு அலகின் தொழிற்பாட்டை நிரோதிப்பதன் மூலம் சிறுவர்கள் மத்தியில் மூளைப் புற்றுநோய் தோன்றுவதிலின்றும் குறிப்பிடத்தக்க அளவுக்கு பாதுகாப்பளிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இக்கண்டுபிடிப்பு இத்துறையில் சிறந்த முன்னுதாரணக் கண்டுபிடிப்பாகி இருப்பதோடு எதிர்கால ஆய்வுகள் பலவற்றுக்குமான உறுதியான ஆரம்ப அடித்தளத்தை இட்டிப்பதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

மேலதிக தகவல் இங்கு.

Labels: , ,

பதிந்தது <-குருவிகள்-> at 10:20 pm

1 மறுமொழிகள்:

Blogger thamizham விளம்பியவை...

your work is very good
visit my web www.thamizham.net
yours
pollachi nasan

Sun Nov 09, 02:57:00 pm GMT  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க