Tuesday, November 04, 2008

சூரியக் கதிரியக்கத்தில் இருந்து காக்கும் வழி.



சூரிய கதிரியக்கத்தின் தாக்கத்திலிருந்து நீண்ட நேரத்திற்கு மனிதர்களை பாதுகாப்பதற்கான வழியை தாங்கள் கண்டுபிடித்திருப்பதாக, பிரிட்டனில் பணிபுரியும் விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டிருக்கிறார்கள்.

இதன் மூலம் செவ்வாய்கிரகத்திற்கு மனிதனை அனுப்பும் முயற்சிக்கு தடையாக இருந்த ஒரு காரணியை தாங்கள் முறியடித்திருப்பதாக அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

நடைமுறையில் பயன்படுத்துவதற்கு சிரமமான மிகப்பெரிய தொரு உபகரணத்தின் மூலந்தான் சூரிய கதிரியக்கத்தில் இருந்து மனிதர்களை பாதுகாக்க முடியும் என்று இது வரை கருதப்பட்டு வந்தது. ஆனால், இதற்கு மாற்றாக, விண்கலத்தை சுற்றி காந்தப்பாதுகாப்பு கவசத்தை அளிக்கத்தக்க உபகரணத்தை தாங்கள் உருவாக்கியிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

செவ்வாய் கிரகத்திற்கு சுற்றுப்பாதையில் செல்வதற்கு குறைந்தது 18 மாதங்கள் பிடிக்கும். இந்த காலகட்டத்தில் உரிய பாதுகாப்பு கவசம் இல்லாமல் விண்வெளிவீரர்கள் பயணிக்க நேர்ந்தால் அவர்களுக்கு புற்றுநோய் உருவாவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கருதப்படுகிறது.

bbc/tamil

Labels: , ,

பதிந்தது <-குருவிகள்-> at 10:35 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க