Wednesday, December 03, 2008

கிளஸ்ரர் குண்டுகளுக்கு 100 நாடுகள் தடை.



நோர்வே நாட்டின் தலைநகரில் மேற்கொள்ளப்படும் கிளஸ்ரர் குண்டுகள் (cluster bombs ) எனப்படும் கொத்தணிக் குண்டுகள் மீதான பயன்பாட்டை தடுக்கும் ஒப்பந்தத்தில் உலகில் உள்ள 100க்கும் அதிகமான நாடுகள் கையெழுத்திட முன் வந்து கையெழுத்திட ஆரம்பித்துள்ளன.

உலகில் போராயுதங்களால் சாதாரண மனிதர்களுக்கு ஏற்படும் இழப்புக்களில் கிளஸ்ரர் குண்டுகளால் ஏற்படும் பாதிப்புக்கள் குறிப்பிடத்தக்கவை.

இரண்டாம் உலகப் போர் காலத்தில் இருந்து பாவிக்கப்பட்டு வரும் கிளஸ்ரர் குண்டுகளை அமெரிக்கா உட்பட்ட நேட்டோ நாடுகளும், ரஷ்சியா, இஸ்ரேல் மற்றும் சீனா போன்ற நாடுகளும் உற்பத்தி செய்து தமது இராணுவத் தேவைகளுக்காகப் பாவிப்பது மட்டுமன்றி மலிவு விலைகளில் ஏழை நாடுகளுக்கும் விற்று பொதுமக்கள் மத்தியில் பேரழிவுகளை ஏற்படுத்தி வருகின்றன.

சிறீலங்கா போன்ற மூன்றாம் உலக நாடுகளும் இன அழிப்புப் போர்களில் இவ்வகை குண்டுகளை ரஷ்சியா போன்ற நாடுகளிடமிருந்து பெற்று பாவித்து வருகின்றன.

100க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டாலும் கிளஸ்ரர் குண்டுகளை அதிகளவில் உற்பத்தி செய்து பயன்படுத்தும் மற்றும் விநியோகிக்கும் அமெரிக்கா, ரஷ்சியா மற்றும் சீனா போன்ற கொடிய போராயுதங்களை கொண்டுள்ள நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட முன் வரவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.



1. The cluster bomb, in this case a CBU-87, is dropped from a plane and can fly about nine miles before releasing its load of about 200 bomblets.
2. The canister starts to spin and opens at an altitude between 1,000m and 100m, spraying the bomblets across a wide area.
3. Each bomblet is the size of a soft drink can and contains hundreds of metal pieces. When it explodes, it can cause deadly injuries up to 25m away.

ஒரு பெரிய குண்டு விமானத்தில் இருந்து போடப்பட்டதும் அது வெடித்து பல நூறு சிறிய குண்டுகளை பரந்த பிரதேசமெங்கும் வீசும். இதையே கிளஸ்ரர் குண்டுகள் எங்கின்றனர். இதனால் பொதுமக்களே அதிகம் உயிரிழப்புக்களையும் உடலுறுப்பு இழப்புக்களையும் சந்தித்துள்ளனர்.

கண்ணிவெடிகளுக்கு அடுத்தபடியாக பொதுமக்களை அதிகம் பாதிக்கும் குண்டுகளாக இவை விளங்குகின்றன.

மேலதிக தகவல் மற்றும் கிளஸ்ரர் குண்டு பற்றிய காணொளி இங்கு.

Labels: , ,

பதிந்தது <-குருவிகள்-> at 11:30 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க