Saturday, February 07, 2009

361 ஏலியன் (வேற்றுகிரவாசிகள்) உள்ள கிரகங்கள்.



எமது சூரியன் அடங்கும் அகிலத் தொகுதியில் (Galaxy)மட்டும் 361 வேற்றுக்கிரகங்கள் மதிநுட்ப ஜீவராசிகளைக் கொண்டிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கணக்கிட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் பல மடங்கு கூடலாம் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

சரி.. இவ்வளவு அழுத்தம் திருத்தமா கணக்கிட்டுச் சொல்லுறீங்களே ஏன் மனிதர்களால் பூமியில் இருந்து அந்த மதிநுட்ப வேற்றுக்கிரவாசிகளோடு தொடர்பு கொள்ள முடியவில்லை என்று கேட்டால்.. அவர்களோடு தொடர்பு கொள்வதற்குரிய சரியான வழிமுறை மனிதனுக்கு தெரியவில்லை என்கின்றனர் விஞ்ஞானிகள்.

அவர்கள் எப்படி இருப்பார்கள்.. எப்படிப் பழகுகிறார்கள் என்று எதுவுமே தெரியாமல் எப்படி தொடர்பு கொள்வது என்று கேட்கின்றனர் விண்வெளி பற்றி ஆய்வு செய்யும் விஞ்ஞானிகள்.

அட எமது அகிலத்தொகுதியில் மட்டும் இத்தனை வேற்றுக்கிரகவாசிகள் உள்ள கிரகங்கள் நம்ம பூமிக்கு போட்டியா இருக்கென்றால்.. எண்ணி அளவிட முடியாத அளவுக்கு அகிலங்களைக் கொண்டுள்ள இந்தப் பிரபஞ்சத்தில் (Universe).. மனிதனை போன்ற உயிரிகள் வேற்றுக் கிரகத்தில் இருக்காமலா போய் விடுவார்கள்.

எதற்கும் தேடிப் பார்ப்போம். அப்போ தான் அதிநவீன ஆயுதங்கள் செய்து அவர்களோடும் சண்டை பிடிச்சு.. எமது அழிவை நிச்சயித்துக் கொள்ளலாம்..!

பூமிக்கு வெளியே இதுவரை வெறும் 330 கோள்களையே (கிரகங்களை) மனிதன் அடையாளம் கண்டிருக்கிறான் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.


மேலதிக தகவல் இங்கு.

Labels: , ,

பதிந்தது <-குருவிகள்-> at 10:54 pm

5 மறுமொழிகள்:

Blogger CVR விளம்பியவை...

///எதற்கும் தேடிப் பார்ப்போம். அப்போ தான் அதிநவீன ஆயுதங்கள் செய்து அவர்களோடும் சண்டை பிடிச்சு.. எமது அழிவை நிச்சயித்துக் கொள்ளலாம்..!/////

:)

Sun Feb 08, 01:59:00 am GMT  
Blogger அமைதி ரயில் விளம்பியவை...

pls visit and give your feedback

http://peacetrain1.blogspot.com/

Mon Feb 09, 04:02:00 am GMT  
Blogger kuruvikal விளம்பியவை...

நன்றிகள் சி வி ஆர் மற்றும் அமைதி ரயில்..!

Mon Feb 09, 09:55:00 pm GMT  
Blogger vijay prasanna விளம்பியவை...

தன் குடும்பத்திற்காக தினமும் 14 மணி நேரம் உழைத்துவிட்டு வந்து இப்படி ஒரு கட்டுரையை படிக்கும் பொது ..அட இந்த பிரபஞ்சத்தில் நாம் ஒரு புள்ளி கூட கிடையாது என்பது புரிகிறது.
யாருக்கு தெரியும் வேற்றுக்கிரக வாசிகளும் இதே போல் பின்னூட்டங்கள் அன்னுபிக்கொண்டு இருக்கலாம்!!

விஜய் பிரசன்னா

Tue Feb 10, 03:09:00 am GMT  
Blogger kuruvikal விளம்பியவை...

விஜய்.. தங்கள் ஆதங்கம் புரிகிறது.

ஆனால் பொதுவாக மனிதர்கள் தம்மைச் சுற்றி ஒரு மாயை உலகத்தை கட்டி வைத்துக் கொண்டு.. அதுவே பெரிசு என்றிருக்கின்றனர். சக மனிதனைக் கூட மதிக்காத தற்பெருமை.. சுயநலம் மிக்க மனிதர்களுக்கு.. பிரபஞ்சம் என்ன.. புள்ளி என்ன எதுவும் தெரியாது. :))

Tue Feb 10, 06:26:00 am GMT  

Post a Comment

இந்த இடுகைக்கு மேலதிக தொடுப்புச் செய்ய:

Create a Link

<<முகப்புக்குச் செல்க