Tuesday, February 10, 2009

கடவுளின் துகள் தேடல் மேலும் பிற்போடப்பட்டுள்ளது.



நிலத்துக்கு அடியில் 27 கிலோமீற்றர்களுக்கு வட்டச் சுரங்கம் வெட்டி அதில் Large Hadron Collider எனும் மின்காந்தங்கள் கொண்டு இயக்கப்படும் புரோத்தன் மொத்துகைக் குழாயில் உப அணுத்துணிக்கைகளான புரோத்தன்களை எதிர் எதிர் திசையில் அதி உயர் வேகத்தில் மோதவிட்டு சிதறடித்து, திணிவை ஆக்கும் கடவுளின் கூறைக் கண்பிடிக்க கடந்த ஆண்டில் செய்யப்பட்ட ஆரம்பக்கட்ட பரிசோதனைகளின் பின் மேற்குறிப்பிட்ட மொத்துகைக் குழாயில் இடம்பெற்றிருந்த தவறான மின் சுற்றிணைப்பால் அது சேதமாகி இருந்தது.

சேதங்களை, தவறுகளை சரி பார்த்து இவ்வாண்டின் நடுப்பகுதியில் மீண்டும் இச்சோதனையை ஆரம்பிக்கலாம் என்றிருந்த விஞ்ஞானிகள் தற்போது அதற்காக 2009 செப்டம்பர் திங்கள் வரை பொறுத்திருக்க கேட்டுள்ளனர்.

இப்பரிசோதனையின் போது நுண்ணுய கருந்துவாரம் (Black hole) தோன்ற வாய்ப்பிருப்பதாகவும் அதனால் பூமி அழிந்து விடும் என்றும் ஒரு சாரார் கருத்து வெளியிட்டு வந்த நிலையில் இப்பரிசோதனை கடந்த ஆண்டு செப்டம்பரில் ஆரம்பிக்கப்பட்ட போது முழு உலகமுமே பீதியுடன் பரிசோதனையின் பெறுபேற்றுக்காக மிகப் பெரிய எதிர்பார்ப்போடு காத்திருந்தது.

இப்பரிசோதனை நிறைவேறும் போது பூமி அழிந்துவிடும் என்று நினைத்து இந்தியாவில் ஒரு சிறுமி தற்கொலை செய்து கொண்ட பரிதாபமும் நிகழ்ந்திருந்தது.

ஆனால் விஞ்ஞானிகள் இப்பரிசோதனையால் தமது அறிவுக்கு எட்டியவரை பூமிக்கு ஆபத்தில்லை எங்கின்றனர். இருப்பினும் தமது அறிவுக்கு அப்பால் ஏதாவது பாதகமான விடயங்கள் நடக்கலாம் என்ற கருத்தை அவர்களாலும் முற்றாக நிராகரிக்க முடியவில்லை என்பது குறிப்பிடப்பட வேண்டிய ஒன்றாகும்.

மேலதிக தகவல் இங்கு.

Labels: , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 6:30 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க