Thursday, February 12, 2009

அமெரிக்க - ரஷ்சிய செய்மதிகள் மோதி வெடித்தன.விண்வெளியில் பூமிக்கு மேலே (சைபீரியாவுக்கு மேலே) கிட்டத்தட்ட 800 கிலோமீற்றர்கள் உயரத்தில் சுமார் 560 கிலோ எடையுடைய அமெரிக்க தொலைத்தொடர்புச் செய்மதியும் (1997 இல் ஏவப்பட்டது) 950 கிலோ, ரஷ்சிய இயங்காத நிலை இராணுவச் செய்மதியும் (1993 இல் ஏவப்பட்டது) உச்ச வேகத்தில் ஒன்றோடு ஒன்று மோதி வெடித்துச் சிதறியுள்ளன.

அதனால் கிளர்ந்த முகில் போன்ற தூசிகள் விண்வெளி எங்கும் வியாபித்திருப்பதாகவும் அவற்றால் விண்வெளியில் வலம் வந்து கொண்டிருக்கும் பிற செய்மதிகளுக்கும் அல்லது செயற்கைக் கோள்களுக்கும் ஆபத்து உருவாகலாம் எங்கின்றனர் அவதானிகள்.

அதுமட்டுமன்றி வெடித்துச் சிதறிய செய்மதிகளின் பாகங்கள் பூமியின் வளிமண்டலத்துக்குள் ஈர்க்கப்பட்டு அவை பூமியை நோக்கி எரிந்து விழக்கூடிய வாய்ப்புக்களும் உண்டு எங்கின்றனர்.

இதற்கிடையே இந்த விபத்துச் சம்பவம் காரணமாக விண்வெளியில் 3 விண்வெளி வீரர்களுடன் சுழன்று வரும் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு (ஐ எஸ் எஸ் க்கு) ஆபத்து குறைவு என்கிறது நாசா.

1957 இல் இருந்து உலக நாடுகள் போட்டி போட்டுக் கொண்டு இதுவரை சுமார் 6000 செய்மதிகளை விண்ணுக்கு அனுப்பியுள்ளன. அவற்றில் பல செயலிழந்து விண்வெளியில் குப்பைகளாக மிதந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.செய்மதிகள் மோதிக்கொண்ட ஸ்தானமும்; சிதறிய செய்மதிகளின் மீதிகள் பரந்திருக்கக் கூடிய எல்லைகளும்.


மேலதிக தகவல் இங்கு.

Labels: , ,

பதிந்தது <-குருவிகள்-> at 7:28 am

4 மறுமொழிகள்:

Blogger ராஜ நடராஜன் விளம்பியவை...

அறியத் தந்தமைக்கு நன்றி.

Thu Feb 12, 08:15:00 am GMT  
Anonymous Anonymous விளம்பியவை...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் சேர்த்துள்ளோம்.

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்

Thu Feb 12, 08:43:00 am GMT  
Blogger kuruvikal விளம்பியவை...

வருகைக்கு நன்றிகள் நடராஜன்.

வலைப்பூ.. உங்கள் வலைப்பூத்திரட்டியில் பதிவு செய்வது இலகுவானதாக இல்லையே. நிறைய.. கேள்விகள்.. நிரப்பல்கள்..??!

கொஞ்சம் எளிமைப்படுத்தலாமே..!

Thu Feb 12, 11:23:00 am GMT  
Anonymous Anonymous விளம்பியவை...

செயற்கைக் கோள்கள் மோதலால் விண்ணில் பெரும் குப்பை

கடந்த செவ்வாய்க்கிழமை பூமியிலிருந்து சுமார் 790 உயரத்தில் சைபீரியாவுக்கு நேர் மேலே அமெரிக்கா மற்றும் ரஷ்யாவின் இரு செயற்கைக்கோள்கள் மோதி்க் கொண்டன.

இதில் அவை இரண்டும் சிதறியதில் நூற்றுக்கணக்கான துகள்கள் புவியை சுற்ற ஆரம்பித்துள்ளன. இந்தத் துகள்களால் விண்வெளியில் உள்ள பிற செயற்கைக் கோள்கள், சர்வதேச விண்வெளி மையம், ஹப்பிள் தொலைநோக்கி ஆகியவற்றுக்கு சேதம் ஏற்படலாம் என்ற பீதி விஞ்ஞானிகளிடையே பரவியுள்ளது.

மேலும் இனி செலுத்தப்படப் போகும் செயற்கைக் கோள்களுக்கும் இந்த துகள்களால் பிரச்சனை வரலாம் என்று கூறப்படுகிறது.

மோதிக் கொண்ட செயற்கைக் கோள்களில் ஒன்று அமெரிக்காவின் தொலைத் தொடர்பு செயற்கைக் கோளான இரிடியம்-33. இன்னொன்று ரஷ்யாவின் ராணுவ செயற்கைக் கோளான காஸ்மோஸ் 2251. 1993ம் ஆண்டு ஏவப்பட்ட இந்த 700 கிலோ செயற்கைக் கோள் இது செயலிழந்த நிலையில் விண்ணில் சுற்றிக் கொண்டிருந்தது.

விண்வெளி வரலாற்றிலேயே இரு செயற்கைக் கோள்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மோதலால் இரு மாபெரும் துகள் மேகங்கள் உருவாகியுள்ளன. அவை புவியை சுற்ற ஆரம்பித்துள்ளதால் ரிமோட் சென்சிங் உள்ளிட்ட வகையைச் சேர்ந்த செயற்கைக் கோள்களுக்குத் தான் முதல் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்த ரக செயற்கைக் கோள்கள் தான் புவியிலிருந்து 800 கி.மீ. உயரத்தில் பறப்பது வழக்கம்.

சர்வதேச விண் நிலையம் இப்போது 354 கி.மீ. உயரத்தில் பறந்து கொண்டிருப்பதால் உடனடியாக ஆபத்தில்லை என்றாலும் அதில் சில துகள்கள் கீழே இறங்கினால் பிரச்சனை தான். ஆனால், இதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு என்கின்றனர் நாஸா விஞ்ஞானிகள். இப்போது இந்த நிலையத்தில் இரு அமெரிக்கர்கள், ஒரு ரஷ்ய வீரர் தங்கியுள்ளனர்.

அதே போல பல விண்வெளி ரகசியங்களை உடைத்துக் காட்டி வரும் உலகின் முதல் விண்வெளி தொலைநோக்கியான ஹப்பிள் பூமியிலிருந்து 600 கி.மீ. உயரத்தில் பறந்து கொண்டுள்ளது. சிதறிய பாகங்களும் துகள்களும் கீழே இறங்க ஆரம்பித்தால் ஹப்பிளுக்கும் சிக்கல் வரலாம்.

இதையடுத்து இப்போது ஒவ்வொரு துகளையும் தனித்தனியே ட்ராக் செய்ய ஆரம்பித்துள்ளது நாஸா. அவற்றி்ன் அளவு, சுழற்றி, திசை ஆகியவற்றை கம்ப்யூட்டர்கள் உதவியோடு ட்ராக் செய்து அவை எப்போது, எங்கே சுழலும் என்ற மாபெரும் 'குப்பை ஆய்வில்' இறங்கியுள்ளது.

இப்போதைய நிலவரபப்படி விண்ணில் மணிதனால் உருவாக்கப்பட்ட வி்ண்கலங்கள், செயற்கைக்க கோள்கள், துகள்கள், ராக்கெட் பாகங்கள் என 18,000க்கும் மேற்பட்ட பொருள்கள் வலம் வந்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்ககது.

பல நாடுகளும் ராக்கெட்கள், செயற்கைக் கோள்கள், விண் கலங்களை அனுப்ப ஆரம்பித்துவிட்டதால் விண்வெளியிலும் இடப் பற்றாக்குறை ஏற்பட்டு பல காலமாகிவிட்டது. இதனால் தான் விண்வெளி ஆய்வில் ஈடுபடும் ஒவ்வொரு நாட்டுக்கும் தனி ஸ்லாட் (செயற்கைக் கோள் பாதை) தரப்பட்டு வருகிறது. இருந்தாலும் இது போன்ற விபத்துகள் இனிமேல் அதிகமாகவே நடக்கும் என்கிறது நாஸா.

கடந்த 2007ம் ஆண்டில் தனது செயலிழந்த ஒரு செயற்கைக் கோளை சீனா ராக்கெடை விட்டு மோதி அழித்ததில் மட்டும் 2,500 குப்பை துகள்கள் ஏற்பட்டு இன்னும் அவை பூமியை சுற்றிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யா தனது செயலிழந்த காஸ்மோஸ் செயற்கைக் கோளை "junk orbit"எனப்படும் செயலிழந்த செயற்கைக் கோள்களுக்கான வட்டப் பாதையில் தான் சுற்ற விட்டிருந்தது. ஆனால், அதில் போய் அமெரிக்காவின் செயற்கைக் கோள் மோதியது, அமெரிக்கா தரப்பிலேயே தவறு இருப்பதைக் காட்டுவதாக ரஷ்யாவும் சீனாவும் கூறியுள்ளன.

ஆனால், தங்கள் பக்கம் தவறு இல்லை என்று அமெரிக்காவின் இரிடியம் செயற்கைக் கோள் நிறுவனம் கூறுகிறது. இந்த நிறுவனத்தின் மேலும் 66 செயற்கைக் கோள்கள் விண்ணில் சுற்றி வந்து கொண்டுள்ளன. இவை அனைத்தும் தொலைத் தொடர்பு செயற்கைக் கோள்களாகும்.

இப்போது மோதிக் கொண்ட அமெரிக்க செயற்கைக் கோள் 1997ம் ஆண்டில் ஏவப்பட்டதாகும். இதன் எடை 560 கிலோ.

இந்த குப்பை துகள்கள் கொஞ்சம் கொஞ்சமாக பூமியின் வட்டப் பாதைக்குள் நுழைந்து எரிந்து சாம்பலாகும் வரை இனிமேல் ஏவப்படவுள்ள செயற்கைக் கோள்களை நேரம் பார்த்து, பாதையில் குப்பைத் துகள்கள் 'நடமாட்டம்' இல்லாத நேரத்தில் தான் ஏவ வேண்டி வரும். இந்தத் தொல்லை பல ஆண்டுகளுக்கு நீடிக்கும்.

thatstamil.com

Sat Feb 14, 08:43:00 am GMT  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க