Friday, February 13, 2009

உலக மீன் வள இருப்பில் வீழ்ச்சி - எச்சரிக்கை



பூமியில் நிகழ்ந்து வரும் சுற்றுச்சூழல் மாற்றங்கள் காரணமாக பல மில்லியன் ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்களுக்கு நிறைந்த போசனை உணவாகக் கிடைத்து வரும் மீன் உணவுக்கான வள இருப்பில் வீழ்ச்சியும் தளம்பல் நிலையும் தோன்றியுள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

கடல் நீரின் சராசரி வெப்ப நிலை அதிகரிப்பு, காபனீரொக்சைட் வளிமண்டத்தில் அதிகரிப்பதால் ஏற்படும் கடல் நீர் அமிலமாகும் தன்மை அதிகரிப்பு மற்றும் சமுத்திர நீரோட்டங்களின் பாங்குகள் மாறியுள்ளமையால் ஆசிய, ஆபிரிக்க மற்றும் தென்னமரிக்க பிராந்தியங்களில் மீன் வள இருப்புக் குறைவடைந்து வருகின்றமையும் மீன்கள் துருவப் பகுதிகள் நோக்கி இடம்பெயரும் தன்மை அதிகரித்திருப்பதால் நோர்டிக் நாட்டுக் கடல்களில் மீன் வள இருப்பு அதிகரிக்கும் வாய்ப்பும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையால் வளர்ந்து வரும் நாடுகளே போசனை நிறைந்த மலிவான உணவை மக்களுக்கு வழங்குவதில் நெருக்கடிகளை அதிகம் சந்திக்க உள்ளன என்றும் தெரிவிக்கப்படுகிறது.

முகாமைத்துவமற்ற அளவுக்கு மிஞ்சிய மீன் பிடியும் மீன் வளக் குறைவுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக இனங்காணப்படுகின்றது. அதுமட்டுமன்றி மீன்களுக்கு உணவாகும் நுண்ணிய தாவரங்கள் மற்றும் விலங்குகள் சூழல் வெப்பமுறுதல் விளைவுகளால் அழிவை மற்றும் பரம்பல் வேறுபாட்டைக் காட்டி வருவதும் இந்த நிலைக்கு ஏதுவாக அமைகிறது.



இந்த நிலையில் உலக மீன் வளம் தொடர்ந்து வீழ்ச்சியுறின் 2050 ம் ஆண்டு வாக்கில் உணவுக்குப் பயன்படும் உலக மீன் வளம் முற்றாக துடைத்தழிக்கப்படலாம் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.

மேலதிக தகவல் இங்கு.

Labels: , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 9:31 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க