Sunday, April 12, 2009

15 ஆண்டுகள் சோடி மாறாது வாழும் பறவைகள்.



உயிரினக்காப்பாளர்களால் கடந்த 15 ஆண்டுகளாக இனங்காணப்பட்டு வரும் 20 ஆண்டு கால வயதுடைய பெண் osprey (வல்லூறு வகைப் பறவைகள்) பறவை.

கடந்த 15 ஆண்டுகளாக சோடி மாற்றமின்றி,ஆண்டு தோறும் கிட்டத்தட்ட 3000 மைல்கள் தாண்டி ஆபிரிக்காவில் இருந்து குடிபெயர்ந்து பிரித்தானிய ஸ்கொட்லாண்ட் பகுதிக்கு வந்து முட்டையிட்டு வரும் osprey வகை சோடிப் பறவைகள் இம்முறையும் அங்கு வந்து 53 வது முட்டையை வழமை போல ஈஸ்ரர் காலத்தில் இட்டு பெருமை சேர்த்துள்ளன.

இந்த முட்டை பொரிக்க ஆறு கிழமைகள் பிடிக்கும். இப்பறவைகள் இலை தளிர்காலத்தில் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் வழக்கம் உடையவை.

ஒரு காலத்தில் சோடி காத்து வாழ்ந்த மனிதர்கள் இப்ப எல்லாம் சோடி மாற்றி மாற்றி வாழ்வதையே நாகரிகம் என்று கண்டுவிட்டுள்ள நிலையில் பறவைகள் இன்றும் அப்படியே..!


வாழ்த்துக்கள் பறவைகளே.

மேலதிக தகவல் இங்கு.

Labels: , ,

பதிந்தது <-குருவிகள்-> at 12:34 pm

4 மறுமொழிகள்:

Blogger துளசி கோபால் விளம்பியவை...

பறவைகள் வாழ்வில் 'கொடுமை' செய்யும் வழக்கம், அரசியல் மற்ற பொருளாதார நெருக்கடிகள் இப்படியெல்லாம் ஒன்னும் இல்லையே. அதுதான்.

அதுகளுக்குப் படிக்கத் தெரியாதே:-))))

பெங்குவின் பறவைகளும் ஜோடியை மாத்தறதில்லை

Sun Apr 12, 11:00:00 pm BST  
Blogger kuruvikal விளம்பியவை...

பறவைகளுக்குப் படிக்கத் தெரியாதுதான் (கிளி, மைனா போன்றன படிக்கும். கோழிகள் கூப்பிட்டா ஓடி வருங்கள்.) மனிதன் பறவைகளிடத்தில் படிக்க நிறைய இருக்கே துளசி கோபால். :))

Mon Apr 13, 09:05:00 am BST  
Blogger துளசி கோபால் விளம்பியவை...

பறவைகளிடத்தில் மட்டுமா?

மனிதன் போக வேண்டிய தூரம் நிறையவே இருக்கு.

பறவை, விலங்கு, இயற்கை இப்படி ஏராளம்.... கவனிக்கத்தான் மனுசனுக்கு நேரம் இல்லை(-:

Mon Apr 13, 09:13:00 am BST  
Blogger kuruvikal விளம்பியவை...

//பறவை, விலங்கு, இயற்கை இப்படி ஏராளம்.... கவனிக்கத்தான் மனுசனுக்கு நேரம் இல்லை.//

நேரமிருக்கும் மனசிருக்காது. மனசிருந்தால் தானே நேரத்தை ஒதுக்கலாம். எங்க எவனை கவுத்திட்டு தான் மட்டும் வாழலாம்.. என்று நினைக்கவே நேரம் காணாது. -:)))

Mon Apr 13, 10:10:00 am BST  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க