Thursday, April 02, 2009

பூமியில் சனத்தொகை உச்ச அளவை எட்டிவிட்டது.நாம் வாழும் பூமிக்கு நாமே ( மனிதர்கள் ) பாரமாகிவிட்டோம் எனும் நிலைக்கு மனித சனத்தொகை அதிகரித்துவிட்டதாக விஞ்ஞானிகள் கணிப்பிட்டுள்ளனர்.

தற்போதைய மனித சனத்தொகை சுமார் 6.8 பில்லியன்களாகும். இவற்றுள் சீனா, இந்தியா மற்றும் அமெரிக்கா முதல் மூன்று சனத்தொகை கூடிய நாடுகளாக உலகில் விளங்குகின்றன.

இந்த சனத்தொகை அதிகரிப்பானது பூமியில் இருக்கும் பயன்பாட்டுக்குரிய வளத்தை விட அதிகமாக உருவாகி வருவதால் குடிநீர் மற்றும் உணவு வளப்பிரச்சனை என்பது உலகில் விரைந்து அதிகரிக்கும் நிலை இருந்து வருகிறது.இதனை ஈடு செய்ய நீர் முகாமைத்துவப் பயன்பாடு மற்றும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுப் பயிர்களின் உற்பத்திகளை அபரிமிதமாக அதிகரிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. இருப்பினும் இது விடயத்தில் சிக்கல்களும் நிறைந்திருக்கின்றன.

அதுமட்டுமன்றி ஒரு நாளைக்கு உலக சனத்தொகை 218,030 ஆல் அதிகரிக்கிறது. 2040ம் ஆண்டளவில் உலக சனத்தொகை 9 பில்லியன்களாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பூமியின் கொள்ளளவை விஞ்சிய உலக சனத்தொகை அதிகரிப்பானது ஆபத்தான விளைவுகளையே உருவாக்கும் என்பதால் உலக சனத்தொகை வளர்ச்சி வீதத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய கட்டாய நிலை பூமியில் தோன்றி இருக்கின்றது என்கின்றனர் அமெரிக்க விஞ்ஞானிகள்.

மனித இனத்தின் பெருக்கம் பூமியின் சுற்றுப்புறச் சூழல் பாதிப்பையும் அதிகரிக்க வகை செய்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

மேலதிக தகவல் இங்கு.

Malthusian catastrophe - விக்கிபீடியா தகவல்.

Labels: , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 10:28 pm

7 மறுமொழிகள்:

Blogger துளசி கோபால் விளம்பியவை...

புழுக்கள் போலப் பல்கிப் பெருகும் மனுசங்களை என்னதான் செய்வது?

அதிலும் நம்ம இந்தியாவில் சொல்லவே வேணாம்......

பூமி பாரம் அதிகமானா.....

புராணங்களில் இதுக்குன்னே அவதாரங்கள் தோன்றி இருக்கு.

இப்ப அவுங்க எல்லாம் எங்கே போயிட்டாங்க?

ஒருவேளை ஜனக்கூட்டத்தில் சிக்கி மூச்சுமுட்டி செயல் இல்லாமக்கிடக்குறாங்களோ(-:

Fri Apr 03, 01:41:00 am BST  
Blogger rangudu விளம்பியவை...

கவலைப் படாதீங்க சார். அமெரிக்கா உலக சமாதானம், பயங்கரவாத அடக்கல் என்றெல்லாம் பேசி, சண்டை போட்டு, குண்டு போட்டு பூமி பாரத்தைக் குறைத்துக் கொண்டு தானே வருகிறார்கள்.

இஸ்ரேலும், பாலஸ்தீன போராளிகளும் அடித்துக் கொண்டு சாவதைப் படிக்க வில்லையா?

அது மாதிரியே, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இராக் பகுதிகளில் அல் கொய்தா தீவிர வாதிகள் தற்கொலைத் தாக்குதல் நடத்தி ஆள்குறைப்பு செய்து கொண்டு தானே வருகிறார்கள்?

இலங்கையில் விடுதலைப் புலிகளும், சிங்கள இராணுவமும் தங்கள் பங்கிற்கு கொன்று குவிக்க வில்லையா என்ன?

இதைத்தவிர சுனாமிகளும், ரயில், பஸ் விபத்துகளும், எய்ட்ஸ் என்னும் அற்புத நோயும் தங்கள் கடமையைச் செய்து மக்கள் தொகையைக் கட்டுக்குள் கொண்டு வந்து விடும் கவலையை விடுங்கள்.

Fri Apr 03, 02:39:00 am BST  
Blogger kuruvikal விளம்பியவை...

துளசி மற்றும் ரகு சில நகைச்சுவையான விடயங்களோடு சீரியஸான விசயங்களையும் சொல்லி இருக்கிறீங்க.

இந்தியா போன்ற நாடுகள் இப்ப கால்நூற்றாண்டாகவே சனத்தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த திட்டங்களை செயற்படுத்துகின்ற போதும் அவை பூரண வெற்றி அளிக்கவில்லை என்றே தெரிகிறது.

ரகு உங்கள் கவலைகள் நியாயமானவை தான். இருந்தாலும் இயற்கையில் உள்ள வளங்களைத்தான் மனிதன் பயன்படுத்தி வாழ்ந்தாகனும். செயற்கையை உருவாக்கவும் இயற்கை வளங்களைத்தான் பயன்படுத்தி ஆகனும். அந்த வகையில்.. மனித இனப்பெருக்கம் என்பது இயற்கைக்கு நெருக்கடியான விடயம் என்பதை மறுக்க முடியாது. ஆனால் அதற்காக மக்களைக் கொல்வது அல்ல தீர்வு. மக்கள் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் வழிவகைகளைக் கையாலும் அதேவேளை நவீன தொழில்நுட்ப அறிவியலைக் கொண்டு மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை இயற்கையின் மீள்தகவுக்குள் வைத்துச் செய்தாக வேண்டும். அது பற்றித்தான் நாம் சிந்திக்க வேண்டுமே அன்றி மக்களை அழிப்பது பற்றியல்ல என்று நான் கருதுகின்றேன்.

கருத்துப்பகிர்ந்த உறவுகள் இருவருக்கும் நன்றிகள்.

Fri Apr 03, 05:07:00 am BST  
Anonymous Anonymous விளம்பியவை...

ஐயா, இந்த தகவல் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது என கருதி தமிலிஷ் திரட்டியில் இணைத்தேன். இப்பதிவு பிரபல இடுகையாக ஓட்டளிக்கபட்டுள்ளது. நன்றி.

-thenali

PS:நான் ஒரு வாசகன்.திரட்டியுடன்
தொடர்பில்லாதவன்.

Fri Apr 03, 01:45:00 pm BST  
Blogger kuruvikal விளம்பியவை...

நன்றி தென்னாலி உங்களின் ஆக்கபூர்வமான செயலுக்கு.

குருவிகள்.

Fri Apr 03, 11:02:00 pm BST  
Blogger கோவி.கண்ணன் விளம்பியவை...

இங்கே சிங்கையில் குழந்தை பெற்றுக் கொள்ளச் சொல்லி சிறப்பு சலுகை அறிவித்து இருக்காங்க

Wed Apr 15, 08:49:00 am BST  
Anonymous J.M.இஹ்ஸான் விளம்பியவை...

அதை நாம் தீர்மானிக்க முடியாது. சனத் தொகை அதிகரிப்பு உண்மையில் ஒரு பிர்ச்சனையே அல்ல. சனத் தொகை அதிகரிப்பை கட்டுப்படுத்த முயல்வது உண்மையில் மடத்தனமாகும்.

Tue Apr 15, 02:31:00 am BST  

Post a Comment

இந்த இடுகைக்கு மேலதிக தொடுப்புச் செய்ய:

Create a Link

<<முகப்புக்குச் செல்க