Monday, April 06, 2009

வெப்ப வலயப் பகுதியில் வாழ்பவர்களுக்கு பெண் குழந்தைகள் அதிகம்.



உலகில் ஆணுக்குப் பெண் சனத்தொகையில் 50 : 50 என்று அமையத்தக்கதாகவே மனிதனில் பால் தேர்வு நிறமூர்த்தங்கள் உள்ளன. இருப்பினும் இயற்கையில் நடைமுறையில் இதில் சிறிதளவு ஏற்றத்தாழ்வுகள் வருவதுண்டு.

அந்த வகையில் உலகில் வெப்ப வலய நாடுகளில் (பூமத்திய கோட்டுப் பகுதியை அண்டிய நாடுகளில்) வாழும் மக்களுக்கு அநேகம் பெண் குழந்தைகள் பிறக்கவே வாய்ப்பு அதிகம் என்கின்றனர் ஆண் - பெண் பிறப்பு விகிதம் தொடர்பில் ஆய்வில் ஈடுபட்ட ஆய்வாளர்கள்.

இதற்கு அதிக வெப்பம் மற்றும் நீண்ட பகல் பொழுது என்பன காரணமாக இருக்கலாம் என்று எதிர்வு கூறப்படுகிறது.

இருப்பினும் சூழல் மாற்றங்கள் அல்லது கூர்ப்பின் நோக்கம் கருதியும் கூட இவ்வாறான தன்மைகள் பெறப்படக் கூடும் என்றும் கருதுகின்றனர் சிலர். ஆனால் இதற்கான உண்மைக் காரணத்தைக் கண்டறிவதில் சிக்கல் நிலவுகின்றது.

அதுமட்டுமன்றி வாழும் சூழல் கொடுக்கும் அழுத்தங்கள் (போரால் உருவாகும் மன அழுத்தம் உட்பட) போன்றவையும் பெண் குழந்தைகளின் பிறப்பை ஊக்குவிக்கின்றன.

கருவில் உள்ள ஆண் குழந்தைகள் பெண் குழந்தைகளை விட இலகுவில் பாதிப்படையக் கூடியன என்பதால் அவற்றின் பிறப்பு எண்ணிக்கை குறைந்திருக்கலாம் என்று கருதுகின்றனர் சில ஆய்வாளர்கள்.

பூகோள அமைவிடம் தொடர்பில் ஆண்களில் உயிரணுக்களை வெளித்தள்ளும் இயல்பு மற்றும் உயிரணுக்களின் இயல்புகளில் ஏற்படும் மாற்றங்கள் கூட ஆண் - பெண் பிறப்பு விகிதத்தில் செல்வாக்குச் செய்யலாம் என்றும் கூறப்படுகிறது. காரணம் பூமியின் தென் அல்லது ஐரோப்பா நோக்கி நகர்ந்து வாழ்பவர்கள் மத்தியில் ஆண் குழந்தைகள் பிறப்பது அதிகமாக இருப்பது அவதானிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் வளமான கருக்கட்டும் தகவை அதிகம் கொண்ட இளம் பெண்கள் ஏனைய பெண்களை மற்றும் நடுத்தர வயதுப் பெண்களை விட அதிக ஆண் குழந்தைகளைப் பெறுகின்றனர் என்றும் இதனால் அவர்களுக்கு அதிக பேரப்பிள்ளைகளை கொண்டிருக்க வாய்ப்பளிக்கப்படுகிறது என்றும் மற்றைய பெண்கள் பெண் குழந்தைகளையே அதிகம் பெறுவதுடன் அவர்களுக்கு ஓரிரண்டு பேரப்பிள்ளைகள் இருக்கவே வாய்ப்பும் அமைகிறதாம்.

மொத்த உலக சனத்தொகையில் ஆணுக்குப் பெண் 106 : 100 என்ற விகிதத்தில் தற்போது அமைந்திருக்கிறது. இது நாடுகளுக்கு நாடு வேறுபடும். சீனா போன்ற ஆண் குழந்தைகளை விரும்பும் நாட்டில் தேர்வு முறையில் குழந்தைகள் பிறப்பதால் (பெண் குழந்தைகள் கருவில் அழிக்கப்படுகின்றன) ஆண்களின் எண்ணிக்கை இன்னும் அதிகம். தமிழீழம் போன்ற போர் நடக்கும் நாடுகளில் போரில் ஆண்கள் அதிகம் இறப்பதால் பெண்களின் எண்ணிக்கை ஆண்களை விட அதிகம்.

மேலதிக தகவல் இங்கு.

Labels: , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 4:53 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க