Sunday, April 12, 2009

சார்ள்ஸ் டார்வினின் முட்டை கண்டுபிடிப்பு.



"இயற்கைத் தேர்வுக் கொள்கை" எனப்படும் பூமியில் உயிரின கூர்ப்புத் தொடர்பான கொள்கையை உலகுக்குத் தந்த சார்ள்ஸ் டார்வின் தனது கொள்கைக்கு ஆதாரம் தேடி HMS Beagle எனப்படும் கப்பல் மூலம் உலகின் பல பாகங்களுக்கும் சென்று மாதிரிகளைச் சேர்த்த போது கண்டெடுத்த முட்டையொன்று பிரித்தானிய கேம்பிரிட்ஷ் பல்கலைக்கழக தொல்பொருள் சேமிப்பிடத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்த முட்டையை டார்வின் அதற்கு அளவில்லாத சிறிய பெட்டி ஒன்றுக்குள் அடைத்து வைத்ததால் அதில் வெடிப்பு உருவாகி இருக்கிறது. இந்த முட்டை மீது டார்வின் தனது பெயரை தன் கைப்பட எழுதி இருக்கிறார். (இந்த இடத்தில் இந்தளவு பெரிய அறிஞருக்கு முட்டைக்கு அளவான பெட்டியை தேர்ந்தெடுக்க முடியவில்லையே ஏன்.. என்ற கேள்வியும் தொக்கி நிற்கிறது.)

கேம்பிரிட்ஷ் பல்கலைக்கழக தொல்பொருள் சேமிப்பிடத்தில் பல்லாயிரக்கணக்கான தொல்பொருட்கள் மத்தியில் இம்முட்டை எங்கிருக்கிறது என்பதைக் கண்டறிவதில் சிரமம் நிலவியது.இந்த நிலையில் ஒரு அன்பரால் பல்கலைக்கழகத்தில் இருந்த தொல்பொருட்கள் சேமிப்பிடத்தில் பல தொல்பொருட்கள் மத்தியில் இருந்து ஊதியமற்ற ஊழிய அடிப்படையில் இந்த முட்டை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சார்ள்ஸ் டார்வின் அண்மையில் தான் அவரது 200வது பிறந்த நாளில் உயிரியல் உலகால் நினைவு கூறப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலதிக தகவல் இங்கு.

Labels: , ,

பதிந்தது <-குருவிகள்-> at 11:55 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க