Friday, April 17, 2009

முகத்தில் அதீத முடி வளர்ச்சி உள்ள பெண்களே... கவனம் - (மருத்துவம்)பெண்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையானோருக்கு ஆண்களைப் போல இல்லை என்றாலும் ஓரளவு மீசை அல்லது தாடி அல்லது கன்னங்களில் அதிக உரோமம் என்று உடலில் அசாதாரண முடி வளர்ச்சிகள் காணப்படுவதை பலரும் அவதானித்திருப்பீர்கள்.

இன்றைய உலகில் இப்படியான பல பெண்கள் தமதுடலில் அதீத முடி வளர்ச்சியைக் கண்டதும் ஆண்களைப் போல "சேவ்" செய்துவிட்டு அல்லது இரசாயனங்களைத் தடவி மயிர்களைப் பிடுங்கிவிட்டு சாதாரண பெண்கள் போல காட்சியளிப்பதையும் காணலாம்.

ஆனால் பெண்களின் இந்த முடி வளர்ச்சிகள் ஒன்றும் சாதாரணமானவை அல்ல. அவர்களில் ஏற்படும் ஓமோன் அல்லது உடல்நலக் குறைவின்/ குறைபாட்டினால் ஏற்படும் அறிகுறிகள் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

இது பெண்களில் மன அமைதி இழக்கச் செய்யும் (குறிப்பாக இளம் பெண்களில்) நிலைக்கு( hirsutism) இட்டுச் செல்கிறது.

Polycystic ovary syndrome (PCOS) என்று அழைக்கப்படும் ஒரு வகை சின்றோம் (சின்றோம் என்பது பல வகை அறிகுறிகளை வெளிப்படுத்தும் உடல்நலக் குறைவு)உள்ள பெண்களிலும் இந்த நிலை அவதானிக்கப்பட்டுள்ளது. இந்தச் சின்றோம் உள்ளவர்களில் 70 தொடக்கம் 80% மான பெண்களில் இந்த அதீத முடி வளர்ச்சியை அவதானிக்கலாம்.

இந்தச் சின்றோம் உள்ளவர்களில் சிலரில் புற்றுநோய்கள் அல்லது தைரொயிட் பிரச்சனைகள் (கழுத்து பகுதியில் வீக்கங்கள் ஏற்படுதல் உள்ளடங்க) மற்றும் மாத்திரைகளைப் பாவிக்கும் பழக்கங்கள் தோன்றலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

இவ்வாறான அசாதாரண முடி வளர்ச்சி காணும் பெண்கள் சமூகத்துக்கு பயந்து அவற்றை ஒளிக்காமல் அல்லது பெரிதுபடுத்தாமல் விடாமல், தகுந்த மருத்துவ சிகிச்சை பெற முன் வர வேண்டும் என்று கூறும் ஆய்வாளர்கள், இவ்வாறான பெண்களுக்கு சிகிச்சை அளிக்க என்று கொஸ்மற்றிக் சிகிச்சை முறைகள் மட்டுமன்றி முடி வளர்ச்சியின் தன்மைக்கு ஏற்ப அளிக்க ஓமோன் சிகிச்சை உட்பட இதர சிகிச்சை முறைகளும் உள்ளன என்று பரிந்துரைத்துள்ளனர்.

அதுமட்டுமன்றி அதீத முடி வளர்ச்சியுடைய உடற் பருமன் அதிகம் உள்ள பெண்கள் உடற் பருமனை குறைக்க வழி செய்வதன் மூலம் பெண்களில் அதீத முடி வளர்ச்சிக்கு அடிப்படைக் காரணமாக அமையும் ஆண் ஓமோனின் (testosterone) அளவைக் குறைக்க முடியும் என்றும் பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.

குறிப்பாக அசாதாரண முடி வளர்ச்சி காணும் பெண்கள் அவர்களின் குடும்பப் பின்னணி மற்றும் அவர்களின் இன/ சமூகப் பின்னணி பற்றி நோக்கிவிட்டு அவற்றிலின்றும் இவர்களின் முடி வளர்ச்சி மாறுபட்டு அசாதாரணமாக இருப்பின் நிச்சயம் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியமாகும்.

பெண் பெண்ணாக இருப்பதும் தோற்றமளிப்பதும் அவள் மனிதனாக வாழ்வதும் உலகில் அழகு தானே. எனவே இவ்வாறான அறிகுறிகள் உள்ள பெண்கள் அறிகுறிகளை இட்டு கவலைப்படாமல் அல்லது நீங்களே அவற்றிற்கு சுயதீர்வு தேடாமல் உடனடியாக உங்கள் பகுதியில் உள்ள மருத்துவர்களை நாடுவது நன்றாகும்.

மேலதிக தகவல் இங்கு.

Labels: , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 9:04 am

3 மறுமொழிகள்:

Blogger மு.மயூரன் விளம்பியவை...

தகவலுக்கு நன்றி.

முக்கியமான பிரச்சினை ஒன்றினைத் தொட்டுச்சென்றிருக்கிறீர்கள்.

தங்களுக்கு ஒரு விநயமானvஏண்டுகோள்..

தயவு செய்து இப்பதிவின் தலைப்பையும் உள்ளடக்கத்தின் சில வரிகளையும் மாற்ற முடியுமா?

எதை எப்படி மாற்ற வேண்டும் என்று நான் சொல்ல வரவில்லை.

இவ்வாறு சொல்லக்காரணம், இத்தகைய பிரச்சினைகள் உள்ள சில பெண் நண்பர்கள் எனக்குண்டு அவர்களுக்கு இதனை வாசிக்கப்பரிந்துரைக்கலாம் என்றால், இத்தலைப்பும் உள்ளடக்கத்தின் சில வரிகளும் அவர்களைப் புண்படுத்துவதுபோன்றுள்ளது.

ஏற்கனவே வித்தியாசமான ரோம வளர்ச்சிகளால் உளச்சிக்கல்களுக்கும் தாழ்வுணர்ச்சிக்கும் ஆட்பட்டிருக்கக்கூடிய அவர்களை சில வார்த்தைப்பயன்பாடுகள் மேலும் புண்படுத்தும்.
எனவே அவர்கள் நிலையில் இருந்து இப்பதினைப்படித்து வேண்டிய திருத்தங்களைச் செய்யுமாறு வேண்டுகிறேன்.

நன்றி.

Fri Apr 17, 10:31:00 am BST  
Blogger kuruvikal விளம்பியவை...

திருத்தங்களைக் குறிப்பிட்டால் அவை குறித்துக் கவனம் செலுத்தப்படும்.

மீசைக்காரப் பெண்கள் என்பது தவறான அல்லது புண்படுத்தும் பதமா..??! மீசைக்கார நண்பா என்பதை புண்படுத்தும் பதமாகவா பார்க்கிறோம்.

வியாக்கியானப்படுத்த இதை எழுதவில்லை. தவறா என்பதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பும் இருக்கிறதல்லவா..??!

உங்கள் பரிந்துரையை தெளிவாக வழங்கின் திருத்தங்களைச் செய்ய உதவியாக இருக்கும். உங்கள் பரிந்துரைக்கு நன்றிகள்..!

குருவிகள்.

Fri Apr 17, 11:40:00 am BST  
Blogger kuruvikal விளம்பியவை...

மு.மயூரன் தலைப்பை மாற்றி அமைத்துள்ளேன்.

உள்ளடக்கத்தில் எங்கு மாற்றம் தேவை என்பதை குறிப்பிட்டால் மாற்றுவது குறித்து பரிசீலிக்கலாம்.

நன்றிகள்.

Fri Apr 17, 12:54:00 pm BST  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க