Monday, April 20, 2009

நோய் கலங்கள் உருவாவதை தடுக்க உதவும் மரபணுக்கள் கண்டுபிடிப்பு.



புற்றுநோய் போன்ற நோய்த்தாக்கங்கள் மரபணுக்களில் ஏற்படும் மாற்றங்களால் அல்லது மரபணுக்கள் வெளிப்படுத்தும் இயல்புகளின் தாக்கங்களால் ஏற்படுபவை என்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் இவ்வாறான நோய்த் தாக்கங்களை தடுக்கக் கூடிய மரபணுக்களையும் பிரித்தானிய எடின்பரோ பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

கலங்களில் உள்ள சில நூறு மரபணுக்களின் இயைபால் தோன்றும் பலவீனமான மரபணுக்கள் கொண்ட புள்ளிகள், நோய்த்தாக்கங்கள் கண்ட கலங்கள் பெருகுவதை தடுக்க உதவுவதாகக் கண்டறியப்பட்டுள்ளதுடன் நோய்த்தாக்கமற்ற கலங்கள் பெருகவும் வாய்ப்பளிக்கின்றன என்றும் இனங்காணப்பட்டுள்ளது. இதற்கு முன்னான கண்டுபிடிப்புக்களில் இருந்து இது வேறுபட்டுள்ளது.

அதுமட்டுமன்றி சனத்தொகையில் புற்றுநோய் போன்ற நோய்த் தாக்கங்கள் கண்ட கலங்கள் பல வழிகளில் தோன்றுவதற்கான காரணத்தை கண்டுபிடிக்க இந்த ஆய்வு உதவுவதுடன் பல நோய்களை சுகப்படுத்துவதற்கான வழிமுறைகளையும் காண இது உதவும் என்று கூறப்படுகிறது.

மேலதிக தகவல் இங்கு.

Labels: , ,

பதிந்தது <-குருவிகள்-> at 9:52 am

0 மறுமொழிகள்:

Post a Comment

இந்த இடுகைக்கு மேலதிக தொடுப்புச் செய்ய:

Create a Link

<<முகப்புக்குச் செல்க