Sunday, April 26, 2009

பசுவின் ஜினோம் (பரம்பரை அலகுத் தொகுப்பு) கண்டுபிடிப்பு.



பசு மாடு ஒன்றின் (Hereford cow) கல நிறமூர்த்தங்களில் காணப்படும் மரபணு அலகுகள் (genes) இனங்காணப்பட்டு, வகைப்படுத்தப்பட்டு பின் அவை தொகுக்கப்பட்டு பசுவின் ஜினோம் (genome) அல்லது பரம்பரை அலகுகளின் தொகுப்புப் பெறப்பட்டுள்ளது.

25 நாடுகளில் 30 க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளின் 6 ஆண்டுகளால உழைப்பின் பின்னர் இந்த ஜினோம் தொகுக்கப்பட்டுள்ளது.

பசுவில் மொத்தமாக 22,000 ஜீன்கள் இருக்கின்றன. அவற்றுள் 14,000 ஜீன்கள் எல்லா பாலூட்டிகளுக்கும் (mammals) உள்ள பொதுவான ஜீன்களாக உள்ளன. மிகுதி ஜீன்கள் அல்லது பரம்பரை அலகுகள் பசுக்களின் ஒவ்வொரு இனத்திற்கும் ஏற்ப மாறுபடும் வகையில் அமைந்திருக்கின்றன.

இந்த ஜினோம் கண்டுபிடிப்பானது மாட்டுப் பண்ணை அல்லது பாற்பண்ணை சார்ந்த உணவு உற்பத்திப் பொருட்களான பால் மற்றும் இறைஞ்சி உற்பத்தியில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை உண்டு பண்ணப் பாவிக்கப்படக் கூடியதாக இருப்பதுடன் அதிக பால் மற்றும் இறைஞ்சியை உற்பத்தி செய்யக்கூடிய பசுக்களை இனங்கண்டு அவற்றிடையே தேர்வு முறை இனக்கலப்பை ஊக்குவித்து இயற்கையாகவும், மரபணு அலகு மாற்றத் தொழில்நுட்பம் மூலம் நல்ல வினைத்திறன் உள்ள ஜீன்களை மாற்றீடு செய்து செயற்கையாகவும் நல்லினப் பசுக்களை தொடர்ச்சியாக உருவாக்க இந்த ஜினோம் அறிவு பயன்படுத்தப்படக் கூடிய வாய்ப்பு கிட்டி இருக்கிறது.

உலகில் மாட்டுப் பண்ணை அல்லது பாற்பண்ணை உணவுகளின் (குறிப்பாக பசுப்பால் மற்றும் இறைச்சி) தேவை தொடர்ச்சியாக அதிகரித்து வரும் நிலையில் இக்கண்டுபிடிப்பு இன்னொரு கால்நடை விவசாயப் புரட்சிக்கான முதல் அத்தியாயமாகக் கூட அமையப் பெறலாம்.

அதுமட்டுமன்றி மனிதனுக்கு பசுக்களுக்கும் இடையே மற்றைய சிறிய இனப் பாலூட்டிகளை (எலி போன்றவை) விட அதிக தொடர்பிருப்பதால் பசுக்களில் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள் அல்லது ஆய்வுகள் மனிதனுக்கும் பயன்படக் கூடிய வகைக்கு பொருந்தி இருக்க அதிக வாய்ப்பும் உள்ளது.

அந்த வகையில் இந்த ஜினோம் தொகுப்பு மரபணு தொழில்நுட்ப உலகில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். அதுமட்டுமன்றி ஏலவே மனிதன் உட்பட பல உயிரினங்களின் ஜினோம்கள் பெறப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

மேலதிக தகவல் இங்கு.


இது தொடர்பான Pubmed தகவல் இங்கு - குறித்த ஜீன்கள் பற்றிய தகவல்களை ஆய்வுக்குப் பயன்படுத்த அல்லது கட்டுரைகளுக்குப் பயன்படுத்த இதனைப் பயன்படுத்தலாம்.


Bos taurus ஜினோம் பற்றிய தகவல்களைப் பெற இங்கு தேடவும்.

Labels: , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 6:05 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க