Wednesday, April 15, 2009

உலகின் முதல் குளோனிங் ஒட்டகம்.



குளோனிங் மூலம் உருவாக்கப்பட்ட, உலகின் முதலாவது ஒட்டகம் (பெண், அதற்கு இடப்பட்டுள்ள பெயர் Injaz) கடந்த ஏப்ரல் திங்கள் 8ம் நாள் ஐக்கிய அரபு எமிரேட்டில் பிறந்துள்ளது.

இன்னொரு முழு வளர்ச்சி கண்ட ஒட்டகத்தின் சூலகத்தில் இருந்து பெறப்பட்ட மரபணுக்களை ( கலத்தின் கரு) பிறிதொரு ஒட்டகத்தின் முட்டைக்குள் செலுத்தி அதனை ஆய்வுசாலையிலும் கருப்பையிலும் என்று வளர்த்து இவ்வொட்டகத்தை குளோனிங் (பிரதிப்பிறப்பு) செய்துள்ளனர்.

கருப்பையில் 378 நாட்கள் வளர்ந்த பின் பிறந்துள்ள இந்த ஒட்டகம் 30 கிலோகிராம் எடையுள்ளதாக இருப்பதுடன் இதன் மரபணு அச்சொட்டாக அது பிரதி எடுக்கப்பட்ட ஒட்டகத்தினதை ஒத்திருப்பதாகவும் சொல்கின்றனர்.

5 ஆண்டுகள் முயற்சிக்குக் கிடைத்த இந்த வெற்றியின் மூலம் சிறப்பான இயல்புக்குரிய மரபணுக்களை காவும் ஒட்டகங்களை உற்பத்தி செய்து ஒட்டகப் பால் உற்பத்திக்கு அவற்றைப் பயன்படுத்த முடியும் என்கின்றனர்.

ஏலவே குளோனிங் தொழில்நுட்பம் மூலம் உலகின் பல பாகங்களிலும் செம்மறியாட்டுக் குட்டி, கன்றுக்குட்டி, பூனைக்குட்டி, எலிக்குட்டி மற்றும் பன்றிக்குட்டிகள் என்று பல வகை உயிரினங்களும் பிரதிப்பிறப்பாக்கம் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

உயிரினங்கள் எல்லாம் கடவுளின் படைப்புக்கள் என்று நம்பும் இஸ்லாமிய உலகில் இந்த குளோனிங் ஒட்டகம் செயற்கை முறைப் பிறப்புச் செய்யப்பட்டுள்ளமை கவனிக்கத்தக்க ஒன்றாகும்.

மேலதிக தகவல் இங்கு.

Labels: , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 10:52 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க