Wednesday, April 15, 2009

மூலவுயிர்க்கலங்கள் மூலம் சக்கரை வியாதிக்கு சிகிச்சை.



மூலவுயிர்க்கலங்கள் (Stem cells) என்ற அழைக்கப்படும் என்பு மச்சையில் காணப்படும் ஆதிக்கலங்களின் உதவி கொண்டு சந்தர்ப்பவசத்தால் அழிக்கப்பட்ட அல்லது சேதமாக்கப்பட்ட சதையச் சுரப்பிக்குரிய கலங்களை பிரதியீடு செய்து நீரிழிவு நோயாளிகளில் தேவையான அளவு இன்சுலின் எனும் இரத்தத்தில் சக்கரையின் (குளுக்கோஸ்) அளவைக் கட்டுப்படுத்த உதவும் ஓமோனை உற்பத்தி செய்து இந்த நோயைக் கட்டுப்படுத்த முடியும் என்று அமெரிக்க மற்றும் பிரேசில் நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கூட்டாக நடத்திய ஆய்வில் கண்டறிந்து அதில் வெற்றியும் கண்டுள்ளனர்.

ஆனால் இந்தச் சிகிச்சை முறை நீரிழிவு நோய் வகை 1 அல்லது சக்கரைவியாதி வகை 1 (type 1 diabetes) மிக மிக ஆரம்ப நிலையில் கண்டறியப்பட்டவர்களிலேயே பயனுள்ளதாக அமைந்திருக்கிறது என்றும் மற்றையவர்களில் இதன் வெற்றி பெரிதாக அமையவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக குழந்தைகளாக இருக்கும் போதே தோன்றும் நீரிழிவு நோய்க்கு இது தகுந்த சிகிச்சை முறையாக இனங்காணப்பட்டுள்ளது.

இருந்தாலும் இந்தச் சிகிச்சை முறை type 2 diabetes நோயாளர்களுக்கு பயனுள்ள ஒன்றாக இனங்காணப்படவில்லை. இந்த வகை நீரிழிவு நிலை உடற்பருமன் (obesity) அதிகரிப்பு காரணமாக ஏற்படும் ஒன்றாகவும் உள்ளது.

எதுஎப்படி இருப்பினும் இந்த சிகிச்சை முறை வெற்றி நீரிழிவு நோயாளிகளைப் பொறுத்தவரை மிக மிக மட்டுப்படுத்திய ஒரு வெற்றிச் சிகிச்சை முறை என்றும் இதன் மூலம் நோயாளிகள் மத்தியில் அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்பை வளர்க்கக் கூடாது என்றும் எச்சரிக்கின்றனர் ஆய்வாளர்கள்.

மேலதிக தகவல் இங்கு.

Labels: , ,

பதிந்தது <-குருவிகள்-> at 11:20 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க