Friday, April 03, 2009

விண்வெளிக் கருமைக்குள் இருந்தும் கதிர்ப்புக்கள்.



விண்வெளியில் கரும்பொருட்கள் (dark matter/s) என்பது மொத்த பேரண்டத்தையும் ஆக்கியுள்ளவற்றில் 23% ஆக இருக்கின்றன.

இவ்வளவு காலமும் கரும்பொருள் என்பது மனிதனின் ஆய்வுக்கு உட்பட முடியாத ஒன்றாகவே இருந்து வந்துள்ளது. ஆனால் அந்த நிலையை அண்மைய ஆண்டுகளில் (முறையே 2006 மற்றும் 2008 இல்) விண்ணுக்கு அனுப்பி வைக்கப்பட்ட அமெரிக்க நாசா விண்வெளி ஆய்வு நிறுவனத்துக்குச் சொந்தமான பமீலா (PAMELA) திட்ட விண்கலம் மற்றும் Fermi Gamma-ray Space Telescope ஆகியவை கொண்டு நடத்தப்பட்ட ஆய்வுகள் மாற்றி அமைத்துள்ளனவா என்ற கேள்வி தற்போது எழுந்திருக்கிறது.

கரும்பொருட்களில் இருந்து இலத்திரனுக்கு நேரெதிரான ஏற்ற (Charge) இயல்புள்ள நேரேற்றமுள்ள பொசித்தன்கள் (positrons ) எனும் கூறுகள் காழற்படுத்தப்படுவதான நிகழ்வுக்கு அதிக சாத்தியம் அமைந்து இருக்கலாம் என்று PAMELA திட்ட விண்கலம் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வுகள் சந்தேகிக்க வைத்துள்ளன.



PAMELA திட்ட விண்கலம்.

இருப்பினும் PAMELA திட்டம் விண்வெளியில் கண்டறிந்த இந்தப் பொசித்தன்கள் வேகமாகச் சுழலும் அடர் திண்மமான இறந்த நட்சத்திரங்கள் என்ற வகைக்குள் அடங்கும் நட்சத்திரங்களில் (pulsars ) இருந்தும் காழற்படுத்தப்படக் கூடும் என்றும் விஞ்ஞானிகள் இரு வேறு நிலைப்பாடுகளை இந்த அவதானிப்புப் தொடர்பில் வெளிப்படுத்தியுள்ளனர்.

ஆனாலும் பமீலா திட்ட பதிவுத் தரவு pulsars வெளிக்காழும் கதிர்ப்புகளின் தன்மையில் இருந்து மாறுபட்டுள்ளதாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

பொதுவாக கரும்பொருளில் இருக்கும் அதிக சக்தித் தன்மை காரணமாக அதிலிருந்து காழற்பண்புகள் வெளிப்படுவதில்லை என்ற கருதுகோள்கள் இருப்பினும் பல அறிவியலாளர்கள் இவ்வகையான கருதுகோள்களுக்கு எதிராகவும் விளங்குகின்றனர்.

அதுமட்டுமன்றி கடவுளின் துகள் தேடும் Large Hadron Collider (LHC) பரிசோதனை கூட இந்த கரும்பொருள் தொடர்பான மர்ம முடிச்சுக்களை அவிழ்க்க உதவக்கூடும் என்பதும் விஞ்ஞானிகளின் எதிர்பார்ப்பு.

மேலதிக தகவல் இங்கு.

Labels: , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 9:23 am

1 மறுமொழிகள்:

Blogger Unknown விளம்பியவை...

பூமியில் சனத்தொகையை குறைத்து உலகை அழிவிலிருந்து காப்பாற்றும் தொண்டாகவே கருதி நாங்கள் தமிழர்களை அழித்துவருகிறோம். உலக நாடுகளே இதனை பெரும் தொண்டாகவே கருதி உங்கள் உதவிகளை மேன்மேலும் அள்ளி வழங்குங்கள்.
இப்படிக்கு உண்மையுள்ள புத்தரின் சீடன்,
சிறீலங்கா அரசு.

Fri Apr 03, 11:41:00 am BST  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க