Friday, May 01, 2009

புதுவகைப் புணர்ச்சி (செக்ஸ்) - காணொளி



//ஆண் சிலந்தியில் காணப்படும் விசேடித்த குத்தும் உறுப்பு.//

சிலந்திகளில் Harpactea sadistica இன சிலந்திகளில் ஆண் சிலந்தி வன்முறைத்தனமாக அணுகி பெண் சிலந்தியின் அடிவயிற்றை ஊசி போன்ற இனப்பெருக்க அங்கத்தால் (pedipalp என்ற வாயுறுப்பை அண்டிய காணப்படும் தூக்கத்தில் இந்த உறுப்பு உள்ளது) துளைத்து நேரடியாக முட்டைகள் உற்பத்தி செய்யப்படும் சூலகத்தில் வைத்தே கருக்கட்டலுக்கு அவசியமான ஆண் விந்துக்கலங்களை செலுத்தி விடுகின்றன என்று ஒரு ஆய்வில் கண்டறிந்துள்ளனர் இஸ்ரேலிய உயிரியல் விஞ்ஞானிகள்.

உயிரினப் பரினாம வளர்ச்சியில் கருட்டலுக்கான தகவை அதிகரிப்பது என்பது எப்போதும் முன்னிலை வகிந்து வந்திருக்கிறது. ஏனெனில் வளமான கருக்கட்டல் இன்றில் ஒரு இனத்தின் விருத்தி என்பதே இல்லாமல் போய் விடும் என்பதால் அதற்கு அத்துணை முக்கியம் அளிக்கப்பட்டிருக்கிறது.



//இச் சிலந்தியின் வாய் பகுதியில் முன் இரண்டு பக்கமும் நீட்டி இருக்கும் அமைப்பு pedipalps எனப்படுகின்றன.//

எனினும் இவ்வகை வன்முறைத்தனமான ஆனால் புணர்ச்சி உறுப்புக் கொண்டான புணர்ச்சியும் அதிக கருக்கட்டலுக்கான வாய்ப்பளிப்பும் சிலந்திகளில் அவதானிக்கப்பட்டிருப்பது இதுவே முதற் தடவையாகும்.

வழமையாக சிறிய வலை போன்ற அமைப்பில் இடப்படும் விந்து அணுக்கள் ஆண் சிலந்தியில் காணப்படும் pedipalp தூக்கங்கள் கொண்டு பொறுக்கப்பட்டு பெண்ணின் இனப்பெருக்க உறுப்பு துவாரப் பகுதியில் இடப்படும். பின், அவ்வாறு இடப்படும் விந்தணுக்கள் பெண் சிலந்தியில், receptacles எனப்படும் சூலகங்களை அண்டிக் காணப்படும் பைகளில் சேமிக்கப்படும். பெண் சிலந்தி முட்டையிடுகின்ற போது அந்த முட்டைகள் சேமிக்கப்பட்டிருக்கும் விந்தணுக்களுடன் கலப்புற்று நுகம் உருவாக்கப்படும். இதுவே வகையான சிலந்திகளில் நிகழும் கருக்கட்டல் முறையாக இருக்கின்றது. அதிலிருந்து இம்முறை மாறுபட்டிருக்கிறது.

இந்த வகை சிலந்திகளைப் போன்றே மூட்டைப் பூச்சி போன்ற பூச்சிகளும் கருக்கட்டல் செயற்பாடுகளைச் செய்கின்றன.



//பெண் சிலந்தியின் உடலமைப்பு//

எனினும் இந்த வகை புணர்ச்சியால் பெண் சிலந்திக்கு காயமேற்படும் நிலை இருப்பது சாதகமான காரணியாக அமையாத நிலை இருப்பதால் புணர்ச்சி நிலை இதற்கு அடுத்தப்படியான பாதுகாப்பான நிலைக்கு நகரத்தக்க பரினாம வளர்ச்சி நிகழ எதிர்பார்க்கப்படுகிறது. அதற்குரிய சில கட்டமைப்புக்கள் சில சிலந்திகள் மற்றும் வண்ணத்துப்பூச்சிகளில் அவதானிக்கப்பட்டுள்ளன.

மனிதன் உட்பட்ட உயர் பரினாம வளர்ச்சிப் படியில் இருக்கும் விலங்குகளில் இவ்வாறான புணர்ச்சி நிலை பொதுவானதுடன் அதுவே அவற்றில் கருக்கட்டலுக்கான அதிக வாய்ப்பையும் அளிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

காணொளி கீழுள்ள இணைப்பில் உள்ளது.

மேலதிக தகவல் இங்கு.

Labels: , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 8:53 am

4 மறுமொழிகள்:

Blogger Unknown விளம்பியவை...

ஐயா, நல்ல அருமையான அறிவியல் விடயங்களை எழுதுகிறீர்கள்.
நன்றூ!

ஆனால் அவைகளை புரியும் விதத்தில் எழுதினால் படிக்கும் என்னைப் போன்ற சாமான்யர்களுக்கும் பலன் உள்ளதாக இருக்குமே....

நட்புடன்

Sat May 02, 06:10:00 am BST  
Blogger kuruvikal விளம்பியவை...

தங்கள் ஆர்வத்துக்கும் வருகைக்கும் நன்றிகள். இயன்ற வரை எளிமைப்படுத்தி எழுதி வருகின்றேன். எதிர்காலத்தில் உங்கள் விருப்பம் போல இன்னும் எளிமைப்படுத்தி எழுத முயல்கின்றேன்.

உங்களைப் போன்ற ஒரு சிலர் தரும் ஊக்கமே 6 வருடங்களாக இந்த வலைப்பதிவில் பதியும் ஊக்கத்தை எங்களுக்குத் தருகிறது. தொடர்ந்து வாருங்கள் படியுங்கள் உங்கள் பொன்னான கருத்துக்களை நிறை குறைகளை எழுதுங்கள்.

குறைகள் காணின் துணிந்து சொல்வது எங்களுக்குப் பிடிக்கும். அப்போதுதான் நாம் எம்மை திருத்திக் கொள்ளலாம். விடும் தவறுகளை இனங்காணலாம். திருத்தலாம்.

நன்றி உறவே.

நட்புடன்
குருவிகள் (வலைப்பதிவர்)

Sat May 02, 07:25:00 am BST  
Blogger vijayprasanna விளம்பியவை...

எளிமையான தமிழில் எழுதுவது சரியானதே..அதற்காக நுட்பமான வார்த்தைகளை உபயோகிக்காமல் இருந்தால், அறிவியலை தமிழில் எழுதவே முடியாது என்பவர்களின் எண்ணங்களை மாற்ற வழி இல்லாமல் போய்விடும்..படிக்க படிக்க பழகிவிடும் கரிகாலன் !

பி.கு : தயவு செய்து இப்பொழுது எழுதும் நடையை மாற்றிவிட வேண்டாம் :)

Sat May 02, 04:36:00 pm BST  
Blogger kuruvikal விளம்பியவை...

நன்றி விஜய். நீங்கள் சொல்வது மிகவும் நியாயமானது. மிக எளிமைப்படுத்த முற்பட்டால் அறிவியல் சொல்லாடல் இன்றிய நிலை ஏற்படும்.

எங்களது அடிப்படை நோக்கம் சாத்தியமான எளிய நடைமுறையின் கீழ் இயன்றளவு தமிழ் மொழியாடலூடு அறிவியலை தமிழில் வழங்குவதுதான்.

மக்களுக்கு விளங்காத அறிவியலைக் காட்டிலும் மக்களுக்கு விளங்கக் கூடிய வகையில் அமையும் அறிவியலே மக்களை அறிவூட்டி.. மூடநம்பிக்கைகளிருந்தும் விடுவிக்கவும்.. புதிய அறிவுபூர்வமான வழிமுறைகளில் சிந்திக்கவும் தூண்டும் என்பது எமது எடுகோள். அது தவறோ சரியோ தெரியவில்லை. காலத்தால் தான் இதை அறிய முடியும்.

நட்புடன்
குருவிகள். (வலைப்பதிவர்.)

Sat May 02, 06:53:00 pm BST  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க