Monday, May 11, 2009

கபிள் நோக்கிப் பறந்த அத்லாண்ரிஸ்.



நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துக்குச் சொந்தமான கபிள் விண் தொலைநோக்கி ( Space telescope)யில் ஏற்பட்டுள்ள பழுதுகளை சீர் செய்யவும் புதிய சில உபகரணங்களை பொருத்தவும் என்று அத்லாண்ரிஸ் விண்ணோடம் விண்வெளி வீரர்களைக் காவிக் கொண்டு கபிள் விண் தொலைநோக்கி நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது.

மிகவும் இடர்மிகுந்ததும் ஆபத்தானதுமான இந்தப் பயணத்தில் விண்வெளி வீரர்களுக்கு ஏதேனும் ஆபத்து நேரும் பட்சத்தில் அவர்களை மீட்டு பூமிக்குக் கொண்டு வர பிறிதொரு விண்ணோடம் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கிறது.



//கபிள் அனுப்பிய விண்வெளி பற்றிய படங்களில் ஒன்று.//

1990 இல் விண்ணுக்கு ஏவப்பட்டு பூமிக்கு மேலே கிட்டத்தட்ட 600 கிலோமீற்றர்களுக்கு அப்பால் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் கபிள், விண்வெளியின் ஆழப்பகுதியில் நிகழும் நிகழ்வுகள் மற்றும் விண் கூறுகள் பற்றிய துள்ளியமான தகவல்களை பெற்று பூமிக்கு அனுப்பி வருகின்றது. இருப்பினும் அதனில் ஏற்பட்ட பழுதுகள் மற்றும் கோளாறுகள் காரணமாக முன்னரும் பழுது பார்க்கப்பட்ட கபிள் தற்போதும் பழுது பார்க்கப்பட இருக்கிறது. இதற்காக பல மில்லியன் டாலர்கள் பணம் செலவழிக்கப்படுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.



மேலதிக தகவல்கள் இங்கு.


கபிள் பற்றிய விக்கிபீடியா தகவல்கள்.

கபிள் இணையத்தளத்தில் கபிள் அனுப்பிய விண்வெளி பற்றிய படங்கள்.

Labels: , ,

பதிந்தது <-குருவிகள்-> at 10:48 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க