Thursday, May 14, 2009

நாங்கள் அழிஞ்சு போகப் போறம்.



மனிதனின் தேவைகளின் அதிகரிப்பு மனிதனை மட்டுமல்ல அவன் சார்ந்துள்ள இயற்கைச் சூழலையும் பெரிதும் பாதித்து வருகிறது.

நமது பலவேறு தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் இயற்கையின் பிற உயிரினங்களுக்கான வாழ்விடங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. அதனால் பல உயிரினங்கள் இந்த பூமிப் பந்திலின்றும் நிரந்தரமாக அழிந்துவிடும் நிலை தொடர்ச்சியாக உருவாகி வருகிறது. பல இனங்கள் ஏலவே அழிந்தும் போய்விட்டன.

குறிப்பாக விவசாய நிலங்களின் பெருக்கம்.. மனித வாழ்விடங்களுக்காக நிலத்தேவைகளின் பெருக்கம்.. நகரமயமாக்கல் என்று இயற்கையின் வனப்பு மனிதனால் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக பறவை இனங்களுக்குள் இடத்துக்கான போட்டியும் அதிகரித்துள்ளது. அதனால் பல அரிய வகை பறவை இனங்கள் இப்பூமிப்பந்தில் அழிவின் விழிப்பைத் தொடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.



அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வின் பிரகாரம் 1227 இனங்களைச் சேர்ந்த பறவை இனங்கள் (மொத்த இனங்களில் 12%) இந்த உலகில் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதுடன் 192 இனங்கள் அருகி விடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

இவற்றை அழிவிலின்றும் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரினும் மனிதனின் தேவைகளின் அபரிமித அதிகரிப்புக்கு ஈடுகட்டி இந்த நடவடிக்கைகள் இந்தப் பறவை இனங்களை அழிவிலின்றும் காக்கப் போதுமானவையாக இருக்குமா என்பது கேள்விக்குரிய ஒன்றாகவே இருக்கிறது.



சிந்தியுங்கள் மனிதர்களே.. நீங்கள் மட்டும் இப்பூமியில் வாழ்ந்தால் போதுமா..??! நீங்களாவது அமைதியாக வாழுகிறீர்களா என்றால் அதுவும் இல்லை. பிற இனங்களையாவது வாழவிடுறீங்களா என்றால் அதுவும் இல்லை... ஏன் இந்த நிலை இயற்கை தந்த இந்தப் பூமியில்..??! உயிரினப் பன்மையைத் தொலைத்து மனிதன் இந்தப் பூமிப் பந்தில் தப்பிப்பிழைக்க முடியாது என்பதை மனிதர்கள் உணர்ந்து தொலைநோக்கோடு பேராசைகளைக் கைவிட்டு பிற உயிரினங்களைப் பாதுகாத்து வாழ முன்வர வேண்டும்.

மேலதிக தகவல் இங்கு.

Labels: , ,

பதிந்தது <-குருவிகள்-> at 1:51 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க