Wednesday, May 20, 2009

பெண்களில் மாதவிடாயை தீர்மானிக்கும் மரபணு அலகுகள் கண்டுபிடிப்பு.



மனிதப் பெண்களில் அவர்களின் பருவ காலத்தில் நிகழும் மாதவிடாயைத் தூண்டும் மரபணு அலகுகளை பிரித்தானிய ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

மனிதனில் காணப்படும் 23 சோடி நிறமூர்த்தங்களில் ஆறாவது மற்றும் ஒன்பதாவது நிறமூர்த்தங்களில் இந்த மரபணு அலகுகள் கண்டறியப்பட்டுள்ளன. அத்துடன் இவை மனிதனில் உயரம் மற்றும் நிறையைத் தீர்மானிக்கும் டி என் ஏயை அண்மித்து இருப்பதாலேயே உடற்பருமன் கூடிய மற்றும் குட்டையான பெண்கள் மற்றைய அவர்களின் வயதை ஒத்த இளம் பெண்களை விட குறைந்த வயதில் பூப்படைகின்றனர் என்றும் கூறப்படுகிறது.

அதுமட்டுமன்றி பெண்களில் குறைந்த வயதில் (குறிப்பாக மேற்குலக இளம் பெண்கள் - சிறுமிகள் 7 வயதில் இருந்தே பூப்படைய ஆரம்பித்து விடுகின்றனர்) பூப்படைபவர்களுக்கு பின்னாளில் நீரிழிவு, உடற்பருமன் அதிகரிப்பு, மார்பகப் புற்றுநோய் மற்றும் இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி இவ்வாறு மிக இளவயதில் பூப்படையும் பெண்களுக்கு மன அழுத்தம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், சமூகம் சார்ந்த பிரச்சனைகள், போதைப் பழக்கம், குடிப்பழக்கம், தாழ்வுமனப்பான்மை, புகைப்பழக்கம் மற்றும் தற்கொலைக்கு துணிதல் போன்ற பிரச்சனைகள் எழக் கூடும் என்றும் அத்துடன் கல்வியிலும் பிந்தங்கி இருக்க வாய்ப்பபையும் கொண்டிருக்கிறார்களாம்.

இந்தக் கண்டுபிடிப்பானது வயதாகும் பெண்களில் மற்றும் இளம் பெண்களில் மாதவிடாய் சார்ந்து எழக் கூடிய பிரச்சனைகளுக்கு முன் கூட்டியே தீர்வு தேட பேருதவியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே ஆண்களின் பெண்களில் பருவ காலத்தே நிகழும் மாற்றங்களுடன் தொடர்புபட்ட பல மரணு அலகுகள் இனங்காணப்பட்டுள்ளதுடன் அவை சார்ந்த படிப்புக்கள் தொடர்ந்து வரும் நிலையில் உயரம் மற்றும் உடல் நிறையுடம் தொடர்புபட்டு செல்வாக்குச் செய்யும் இந்த மரபணு அலகுகள் இனங்காணப்பட்டுள்ளமை விசேடமான அம்சமாக அமைகின்றது.

இதைத்தவிர பருவமடைதல் என்பது போசனை உள்ள உணவை உட்கொள்ளுதல், உடற்பயிற்சி மற்றும் வேறு சிறிய தனியொரு மரபணு அலகு தாக்கத்தின் விளைவுகளுடனும் தொடர்புபட்டிருக்கின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.


மேலதிக தகவல் இங்கு.

Labels: , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 11:13 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க