Friday, May 01, 2009

சுவைன் புளு (தடிமன் - காய்ச்சல்) - swine fluஉலகலாவிய ரீதியில் தொற்றுக்களை ஏற்படுத்தி உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் சுவைன் புளு (swine flu )எனப்படும் ஒரு வகை தடிமன் - காய்ச்சல் நோய், H1N1 எனப்படும் வீரியம் குறைந்த வைரஸ் துணிக்கையின் தொற்றால் உருவாகிறது. ((இருப்பினும் இதன் வீரியத்தன்மை குறித்து எதையும் இப்போது அறுதியிட்டுக் கூறிட முடியாத நிலையில் ஆய்வாளர்கள் இருக்கின்றனர். மரணத்தை விளைவிக்கக் கூடிய அளவுக்கு கூட இதன் வீரியத்தன்மை அவதானிக்கப்பட்டிருப்பதே இதற்குக் காரணமாகும்.))

இந்த வைரஸ் தொற்றுக் கண்டவர்களில் சாதாரண தடிமன் - காய்ச்சலுக்குரிய இருமல், தும்மலுடன் கூடிய குணம் குறிகள் ஒப்பீட்டளவில் சிறிதளவு கடுமையானதாக இருப்பதோடு நியுமோனியாவுக்குரிய குறிகளும் தென்படலாம்.

இந்த வைரஸ் துணிக்கைகள் வழமையாக எம்மைச் சுற்றிக் காணப்படுகின்ற மற்றைய புளு வைரஸ்கள் போன்று இருப்பினும் வைரசுக்களின் கூர்ப்பு மிக வேகமானது என்பதால் தற்போதைய வீரியம் குறைந்த வைரஸில் இருந்து வீரியம் கூடிய மிக ஆபத்தான வைரஸ் தோன்றலாம் அல்லது இந்த வைரஸ் ஆபத்தான பறவைக் காய்ச்சல் வைரசுடன் (H5N1) இணைந்து மோசமான விளைவுகளை உருவாக்கக் கூடிய நிலைக்கு மாறக் கூடிய சந்தர்ப்பங்களையும் நிராகரிக்க முடியாது என்று கூறுகிறார்கள் இந்த வைரஸை ஆய்வு செய்த ஆய்வாளர்கள்.
H1N1 (seasonal flu/swine flu)

Spreads easily through coughing and sneezing
Less severe symptoms, but can be deadly

**********

H5N1 (avian flu)

Can mutate rapidly
Causes severe illness and can trigger pneumonia
Spreads easily between birds but human transmission rare.

அடிப்படையில் இந்த சுவைன் புளு (தடிமன் - காய்ச்சல்) வைரஸ் மூக்கு மற்றும் தொண்டைப் பகுதியில் தொற்றின் ஒப்பீட்டளவில் வீரியம் குறைந்த நோய்த் தாக்கத்தைத் தரும் அதேவேளையில் பாதுகாப்பற்ற தும்மல் அல்லது இருமல் மூலம் இலகுவில் ஒருவரில் இருந்து இன்னொருவருக்கு பரவ அதிக வாய்ப்பைக் கொண்டிருக்கும். ஆனால் சுவாசப்பையின் ஆழ்ந்த பகுதியில் இதன் தொற்று அமையின் நோய்த்தாக்கம் வீரியம் கூடியதாக இருக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

பன்றிகளில் அவதானிக்கப்பட்ட இந்த வைரஸ் தற்போது கூர்ப்படைந்து மனிதரிலும் தொற்றும் இயல்பைப் பெற்றிருக்கிறது. ஆனால் இது நிச்சயமாக பன்றியில் இருந்துதான் தொற்ற வேண்டும் என்றில்லை. தொற்றுள்ள மனிதர்களில் இருந்து மனிதர்களுக்கு இலகுவில் தொற்றக் கூடியது.

இந்த வைரஸ் தொற்றுக்கு எதிராக தொற்று ஏற்பட்ட ஆரம்பக் கட்டத்திலேயே வைத்திய சிகிச்சை பெறுவது பாதுகாப்பானதாக இருக்கும். அதுமட்டுமன்றி இந்த வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க என்று Tamiflu வைரஸ் எதிர்ப்பு மாத்திரை வழங்கப்படுகிறது. இது நோயை நேரடியாகக் குணப்படுத்தாது. ஆனால் நோய்த்தாக்கத்திலின்றும் விரைவில் வெளியேற உதவும்.

தொற்றுக் கண்டவர்கள் வைத்திய உதவிகளை உடனடியாக நாடுவதுடன் தூய்மையான ரிசு (Tissue) வைப் பாவித்து தும்மல் மற்றும் இருமல் துணிக்கைகளை அதில் வாங்கிக் கொள்வதுடன் அவற்றை உடனடியாக பாதுகாப்பான குப்பை தொட்டிகளில் இட்டுவிட்டு கைகளை நன்கு சவர்காரம் அல்லது தொற்றுநீக்கிகள் கொண்டு சுத்தப்படுத்திக் கொள்வது தொற்றுக்களைக் குறைக்க வகை செய்யும்.

எனவே மக்கள் கூடிய அளவு தனிச் சுகாதாரத்துடன் நல்ல விழிப்புணர்வு கொண்டு செயற்படின் இந்த நோய்த் தாக்கத்தில் இருந்தும் ஒப்பீட்டளவில் விரைந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.

பொதுப் போக்குவரத்து ஊடகங்களைப் பாவிப்பவர்கள், பாடசாலைகளில் கூடுபவர்கள் அல்லது பொது இடங்களில் கூடுபவர்கள் வாய் மற்றும் மூக்கை மறைத்துக் கட்டக் கூடிய முகமூடிகளை அணிவது மனிதர்களுக்கிடையே தொற்றுக்கள் அதிகம் ஏற்படுவதை கட்டுப்படுத்த உதவும்.

இந்த நோய் பற்றிய முக்கிய குறிப்புக்கள் இங்கு (ஆங்கில மொழியில்)

மேலதிக தகவல்கள் இங்கு.

Labels: , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 10:14 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க