Thursday, June 11, 2009

பூமியோடு செவ்வாய் அல்லது வெள்ளி மோதப் போகிறது.



சூரியக் குடும்பத்தில் உள்ள கோள்களுக்கிடையே மோதல்களுக்கான சாத்தியக்கூறுகள், கோள்களின் மற்றும் அவற்றின் சுற்றுப்பாதைகளின் எதிர்கால பரினாமத்தன்மைகள் குறித்து ஆராய்ந்த விஞ்ஞானிகள் பூமியோடு செவ்வாய் அல்லது வெள்ளி கோள் மோதச் சந்தர்ப்பம் உள்ளதாகவும் ஆனால் அது இன்றோ நாளையோ நடக்கப் போவதில்லை என்றும் அது நடக்க குறைந்தது இன்னும் ஒரு பில்லியன் ஆண்டுகள் எடுக்கலாம் என்றும் கணிப்பிட்டுள்ளனர்.

பூமியோடு சூரியக் குடும்பத்தில் உள்ள பிறகோள்கள் மோத இருக்கும் மிகச் சிறிய வாய்ப்பைப் போன்று வெள்ளி மற்றும் புதன் போன்ற கோள்களுக்கிடையேயும் மோதல் நடக்க வாய்ப்பிருப்பதாகவும் இந்த மோதலின் பின் வெள்ளியை விடச் சற்றுப் பெரிய புதிய ஒரு கோள் உருவாகலாம் என்றும் இருப்பினும் இந்த நிகழ்வு பூமியையும் அதன் சுற்றுப்பாதையையும் பெரிதும் பாதிக்க வாய்ப்பில்லை என்றும் கூறுகின்றனர் விஞ்ஞானிகள்.

பூமியோடு பிறகோள்கள் மோதும் போது ஒரு துப்பாக்கிக் குண்டின் வேகத்தின் 10 மடங்கு அதிகரித்த வேகத்தில் மோதலாம் என்றும் கணிப்பிட்டுள்ளனர்.



காணொளி பிபிசி.கொம் (bbc.com)

இச் செய்தியைப் பார்த்துவிட்டு பயந்து தொலைக்காதீர்கள். இது நடக்க இன்னும் பல மில்லியன் ஆண்டுகள் இருக்காம். அப்போது மனிதர்கள் பூமியில் வாழின் இந்த நிகழ்வை கண்டு கொண்டே மரணிக்க வாய்ப்பிருக்கும். நிச்சயம் நாம் காண முடியாது. ஏனெனில் நாம் அதற்குள் மரணித்துவிடுவோம்.

மேலதிக தகவல் இங்கு.

பட உதவி: Image - Wikipedia

Labels: , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 3:31 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க