Saturday, June 20, 2009

உலக சனத்தொகையில் ஒரு பில்லியன் மக்கள் பட்டினியில்.



உலக மொத்த சனத்தொகையில் ஒரு பில்லியன் ( ஆயிரம் மில்லியன்) மக்கள் பட்டினியில் வாழ்வதாக ஐநாவின் உணவு மற்றும் விவசாய ஸ்தாபனம் (The UN's Food and Agriculture Organisation (FAO)) ஒரு அறிக்கை மூலம் அறிவித்துள்ளது.

இதன் படி உலகில் ஆறுக்கு ஒருவர் பட்டினியில் இருப்பது தெரிய வந்துள்ளது.

ஆசிய - பசிபிக் நாடுகளில் 642 மில்லியன் மக்களும், உப சகாரா ஆபிரிக்க நாடுகளில் 265 மில்லியன் மக்களும், தென்னமெரிக்க மற்றும் கரீபியன் நாடுகளில் 53 மில்லியன் மக்களும் மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆபிரிக்க நாடுகளில் 42 மில்லியன் மக்களும் அபிரிவிருத்தி அடைந்த நாடுகளில் 15 மில்லியன் மக்களும் பட்டினியால் வாடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவுப் பொருட்களின் விலை உயர்வு, தொழில் இழப்பு, போதிய வருமானமின்மை, சுற்றுச் சூழல் மாற்றங்களால் ஏற்பட்ட விளைவுகள் மற்றும் உணவு மற்றும் எரிபொருள் நெருக்கடிகள் என்று பல காரணிகள் இந்த நிலைக்குக் காரணமாகக் காட்டப்பட்டுள்ளன.

அநேக குடியேற்றவாசிகள் நகர்ப்புறங்களில் இருந்து கிராமங்களை நாடும் நிலை தோன்றி உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

மனித இன வரலாற்றில் அதிக எண்ணிக்கையான மக்கள் பட்டினியில் வாழ்வது இதுவே முதற்தடவை என்றும் அதேவேளை உலகின் இன்னொரு பகுதி மிகுந்த செல்வச் செழிப்போடு காணப்படும் நிலையும் இங்கு காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.

உலக சந்தையில் உணவுப் பொருட்களின் விலைகள் குறைந்துள்ள போதும் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் மற்றும் ஏழை நாடுகளில் உணவுப் பொருட்களின் விலை உயர்ந்து வருகின்றமையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஐநா ஸ்தாபனங்கள் உலக மக்களின் இந்தப் பட்டினி நிலையை விரைந்து அகற்ற தம்மாலான முயற்சிகள் அனைத்தையும் எடுத்து வருவதாகவும் மேற்படி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக தகவல் இங்கு.

Labels: , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 11:09 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க