Tuesday, June 23, 2009

சக்தி மிக்க வீதி விளக்குகளால் அவலப்படும் விண்வெளி ஆய்வுகள்.

விண்வெளியை ஆராய பூமியில் அமைக்கப்பட்டுள்ள சக்தி வாய்ந்த தொலைநோக்கிகளுடன் கூடிய ஆய்வு மையங்களும், விண்ணில் செலுத்தப்பட்டு இயங்கிக் கொண்டிருக்கும் கபிள் (Hubble) போன்ற தொலைநோக்கிகளும் பயன்படுத்தப்படுகின்றன.



பூமியில் உயரமான இடங்களில் கூட அமைக்கப்பட்டுள்ள தொலைநோக்கிகளில் பல விண்வெளியில் இருந்து வரும் ஒளிக்கதிர்ப்புக்களின் அடிப்படையில் விண்பொருட்களை இனங்காண அல்லது ஆய்வு செய்யப் பயன்படுத்தப்படுவதால் பிரகாசமான வீதி விளக்குகள் மற்றும் மனிதர்கள் இரவு நேரங்களில் பயன்படுத்தும் நியோன் மின்சார விளக்குகள் போன்ற பிரகாசமான மின் விளக்குகள் பிறப்பிக்கும் ஒளிக்கற்றைகள் தெறிப்படைந்து, முறிவடைந்து தொலைநோக்கிகளை நோக்கி வரும் நிலை இருப்பதால் விண்வெளியில் இருந்து வரும் அடர்த்தி (Intensity) குறைந்த ஒளிக்கற்றைகளைப் பெறுவதில் இடர்கள் சந்திக்கப்படுவதாக பிரான்ஸில் Pyrenees mountain பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தொலைநோக்கியகளோடு கூடிய விண்வெளி ஆய்வுமையங்களின் விண்ணாய்வாளர்கள் கூறியுள்ளனர்.

விண்ணில் சஞ்சரிக்கும் தொலைநோக்கிகளும் குறிப்பிட்ட காலத்துக்கே பயன்படுத்தப்பட்ட முடிவதோடு அவற்றை பழுது பார்ப்பது மற்றும் விண்ணுக்குச் செலுத்துவது என்பன பெரும் பணச்செலவுள்ள செயற்பாடுகளாக இருக்கின்றன. ஆனால் இந்த விண் தொலைநோக்கிகள் கொண்டு ஒளிக்கற்றைகள் தவிர்ந்த விண்வெளியில் உள்ள இதர மின்காந்த கதிர்ப்புக்கள் கொண்டும் ஆய்வுகளைச் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

பூமியில் நிலைநாட்டப்பட்டுள்ள தொலைநோக்கிகள் விண்ணில் இருந்து வரும் ஒளிக்கற்றைகளை மற்றும் வானொலி அலை வகை கதிர்ப்புக்களை கொண்டு விண்ணை ஆராயவே சிறந்தனவாக இருந்து வந்தன. அதிலும் இரவு நேர ஆய்வுகளே விண்ணில் இருந்து ஒளிக்கற்றைகளை பெற்று ஆராயும் தொலைநோக்கிகளுக்கு உபயோகமாக இருந்து வந்தது. இப்போ அதுவும் சிக்கலைச் சந்திக்க ஆரம்பித்திருப்பது விண்வெளி ஆய்வு ஒரு சவால் மிகுந்த எதிர்காலத்தை நோக்கிச் செல்லும் நிலையை உருவாக்கியுள்ளது.

Labels: ,

பதிந்தது <-குருவிகள்-> at 8:34 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க