Wednesday, June 24, 2009

வெப்ப வலய பாலூட்டிகள் விரைந்து கூர்ப்படைகின்றன.



மரபணு மூலக்கூற்று அறிவியல் வளர்ச்சியின் பின் உயிரினக் கூர்ப்புப் பற்றிய பல ரகசியங்கள் பரகசியமாக்கப்பட்டிருக்கின்றன.

அந்த வகையில் தற்போது நடத்தப்பட்ட ஆய்வொன்றில் இருந்து வெப்பமான காலநிலை உள்ள பிரதேசங்களில் வாழும் பாலூட்டி வகை உயிரினங்களில் ஒரே இன அங்கத்தவர்களுக்கிடையே கூட அதிக அளவில் மரபணு சார்ந்த கூர்ப்பு நிகழ்வதாகவும் இது குளிர் காலநிலை உள்ள பகுதிகளில் வாழும் பாலூட்டிகளை விட 1.5 மடங்கு அதிகமாக இருப்பதாகவும் கண்டறிந்துள்ளனர்.

குறிப்பிட்ட வீச்சுக்குள் வெப்பநிலை அதிகரிப்போடு கல அனுசேபச் செயற்பாடுகள் அதிகரிப்பதால் அதனுடன் தொடர்புபட்டு தாவரங்களில் மற்றும் கடல் வாழ் உயிரினங்களில் அவதானிக்கப்பட்டிருந்த இவ்வகைக் கூர்ப்புக்கள், சீரான உடல் வெப்பநிலையைக் கொண்ட பாலூட்டிகளிலும் சூழல் வெப்பத்தின் தாக்கம் சார்ந்து அதிக அளவு கூர்ப்புக்கள் நிகழ வாய்ப்பு இருப்பது இப்போதே முதன்முறையாக அவதானிக்கப்பட்டிருக்கிறது.

உயிரினங்களில் வெப்ப காலத்தில் குளிர்காலத்தை விட அதிகளவு புணரிக்கலங்களான விந்து மற்றும் முட்டைகள் உருவாக்கப்படும் நிலை காணப்படுவதும் அவதானிக்கப்பட்டிருக்கின்றது. உயிரினங்கள் மத்தியில் காணப்படும் இதுபோன்ற செயற்பாடுகளும் மரபணு மூலக்கூற்று (DNA) மாறல்கள் சார்ந்த கூர்ப்புக்கு அதிகம் உதவி அளிக்கக் கூடும் என்றும் கருதப்படுகிறது.

மேலதிக தகவல் இங்கு.

Labels: , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 10:47 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க