Tuesday, June 23, 2009

நல்ல இசை இதயத்துக்கு நல்ல மருந்து - (ஆய்வு முடிவு)



சரியான அளவில் சரியான இசையை கேட்பது, இரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பு வேகம் என்பன குறைவடைந்து இவை தொடர்பான பிரச்சனைகள் தீர வழிவகுப்பதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

உதாரணத்துக்கு உச்சசாயல் operatic music (Puccini's Nessun Dorma) போன்ற இசை வடிவங்களில் பெறப்படும் இசை ஒலிகளை படிப்படியாக கூட்டி மற்றும் குறைத்து சரியான அளவுகளில் வழங்கின் அது பக்கவாதத்தில் இருந்து விடுபட உதவி அளிக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

மேலும் அதிக வேக tempo இசை வடிவங்கள் இதயத்துடிப்பு வேகம் மற்றும் குருதி அமுக்கத்தை அதிகரிக்க வேகம் குறைந்த tempo இசை வடிவங்கள் இவற்றைக் குறைப்பதாகவும் சொல்கின்றனர்.



//operatic music (Puccini's Nessun Dorma)//

இசையின் ஒலி அளவை படிப்படியாக அதிகரிப்பதால் உடல் தூண்டப்பட்டு தோலின் கீழுள்ள குருதிக்குழாய்கள் சுருங்கச் செய்யப்படுவதால் இரத்த அழுத்தம் அதிகரிக்க இதயத்துடிப்பு வேகமும் சுவாச வேகமும் அதிகரிக்கின்றன என்றும் அதேவேளை இசையின் ஒலி அளவைக் குறைப்பது இதற்கு எதிர்மாறான விளைவுகளை உண்டுபண்ணுவதாகவும் அதனாலேயே மேற்படி விளைவுகள் உடலில் தோன்றுகின்றன என்றும் கண்டறிந்துள்ளனர்.

இசை என்பது மலிவானது மட்டுமன்றி உடல்நலத்துக்கும் குறிப்பாக நல்ல மன நிலை மற்றும் குருதிச் சுற்றோட்டத்தைப் போனவும் பெளதீக ரீதியில் உடல்நிலையை நல்ல நிலையில் வைத்திருக்க உதவுவதுடன் பக்கவாதம் மற்றும் இதயத் தாக்கு நோய்களுக்கு இலக்கான நோயாளர்கள் அவற்றின் பாதிப்பிலிருந்து மீள நல்ல மருந்தாக அமைந்திருப்பது மருத்துவ உலகிற்கு நல்ல வரப்பிரசாதமாக அமைந்திருப்பதாகவும் நோயாளர்களுக்கும் நோவின்றிய சிகிச்சைக்கு உதவுவதாகவும் மேற்படி ஆய்வைச் செய்த இத்தாலிய Pavia பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்த ஆய்வில் 24 சுகதேகிகள் 5 வகையான மெல்லிசைகளைக் கேட்கச் செய்யப்பட்டு மேற்படி பெறுபேறுகள் பெறப்பட்டுள்ளன.

மேலதிக தகவல் இங்கு.

Labels: , ,

பதிந்தது <-குருவிகள்-> at 10:05 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க