Friday, July 17, 2009

இந்திய சந்திரயான் -1 விண்கலத்தில் பழுது.



கடந்த அக்டோபர் திங்களில் (அக்டோபர் 2008) பெரும் எதிர்பார்ப்புக்களின் மத்தியில் சந்திரனை ஆராய என்று அனுப்பப்பட்ட இந்திய விண்கலமான சந்திரயான் -1 விண்கலத்தில் உள்ள முக்கிய உணரியில் (sensor) பழுது ஏற்பட்டுள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (ISRO) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்புக் கூறியுள்ளது.

சந்திரயானின் செயற்பாடுகளில் ஆரம்பத்தில் இருந்தே குழப்பங்கள் நிலவினாலும் தற்போதே அது பழுதடைந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. எனினும் பழுதைச் சரிபார்க்க இஸ்ரோ விஞ்ஞானிகள் முயன்று கொண்டிருப்பதாகவும் மேற்படி செய்திக் குறிப்பில் சொல்லப்பட்டுள்ளது.

மேற்படி பழுது காரணமாக சந்திரயான் - 1 இன் ஆயுட்காலம் எதிர்பார்த்ததை விட குறைவாகவே அமையும் என்று கூறியுள்ளனர் இஸ்ரோ அதிகாரிகள்.

சந்திரனின் மேற்பரப்பை முப்பரிமானப் படம் பிடித்து அனுப்புதல் மற்றும் சந்திரனின் மேற்பரப்பில் காணப்படும் கனிமங்கள் தொடர்பில் ஆராய என்று மேற்படி விண்கலம் பெரும் பொருட் செலவில் (3.8 பில்லியன் ரூபாய்கள் செலவில்) விண்ணுக்கு அனுப்பப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

சந்திரயான் - 1 பல பெறுமதிமிக்க தகவல்களை பெற்றுத் தந்திருப்பதாகவும் ஆனால் அவை பழுது காரணமாக தரக்குறைவாக உள்ளதாகவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் மேலும் கருத்து வெளியிட்டுள்ளனர். இருந்தாலும் சந்திரயான்-1 ஐ தற்போதைக்கு முழுமையாகக் கைவிடும் திட்டம் தமக்கு இல்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சந்திரயான் - 1 இந்திய மற்றும் அமெரிக்க, பிரித்தானிய, ஜேர்மனிய உதிரிப்பாகங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் செயற்பாட்டு ஆயுட்காலம் எதிர்பார்க்கப்பட்ட விண்கலமாகும்.

மேலதிக செய்தி இங்கு.

Labels: , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 7:22 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க