Thursday, July 16, 2009

நீண்ட தடங்கலின் பின் எண்டவர் விண்ணேகியது.



/எண்டவரில் பயணிக்கும் கனடிய விண்வெளி வீராங்கணை.//

நீண்ட பல தடங்கல்களின் பின் நாசா விண்ணோடமான எண்டவர் (Endeavour ) 15-07-2009 அன்று விண்வெளியில் சஞ்சரிக்கும் சர்வதேச விண்வெளி நிலையம் நோக்கி பயணத்தைத் தொடங்கியது.

6 அமெரிக்க விண்வெளி வீரர்களையும் ஒரு கனடிய விண்வெளி வீராங்கணையையும் சுமந்து கொண்டு 11 நாட்கள் வேலைத்திட்டத்தின் கீழ் எண்டவர் விண்ணேகி உள்ளது.

இந்த விண்வெளி வீரர்களோடு ஐ எஸ் எஸ் எனப்படும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி இருக்கப் போகும் விண்வெளி வீரர்களின் மொத்த எண்ணிக்கை சாதனை அளவான 13 ஆக எட்ட இருக்கின்றமை இங்கு கூறிப்பிடத்தது.

இந்தப் பயணித்தின் போது விண்வெளி வீரர்கள் 5 விண்வெளி நடைகளையும் மேற்கொண்டு சில கட்டுமானப்பணிகளில் ஈடுபட உள்ளனர்.

இது நாசாவின் விண்ணோடங்களின் விண்வெளிப் பயணங்களில் 127 வது பயணமாகவும், 23 வது விண்வெளிப் பயணமாக எண்டவருக்கும் அமைகிறது.

ஐ எஸ் எஸ் பல நாடுகளின் கூட்டு முயற்சியால் நாலு படுக்கை அறை கொண்ட ஒரு வீடு அளவுக்கு விண்வெளியில் கட்டப்பட்டு வரும் ஒரு விண்வெளி ஆய்வு கூடமாகியுள்ளது..!


மேலதிக விபரங்களும் காணொளியும்..!

Labels: , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 8:32 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க