Saturday, July 25, 2009

வியாழனில் நடத்தது என்ன..?! ஆச்சரியத்தில் விஞ்ஞானிகள்.



நாசா விண்வெளி நிறுவனத்தின் கபிள் விண் தொலைநோக்கி சமீபத்தில் வியாழன் கோளினைப் படம் பிடித்த போது அதன் வளிமண்டத்தில் வழமைக்கு மாறான ஒரு கரும்புகை போன்ற அமைப்பு அவதானிக்கப்பட்டுள்ளது.

இது முதன்முதலில் ஒரு அவுஸ்திரெலிய வானியலாளரால் பூமியில் இருந்தும் ஒரு கரும்புள்ளியாக அவதானிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் கபிளே அதனை தெளிவாகப் படம்பிடித்து அனுப்பியுள்ளது.

இந்த கரும்புகை போன்ற அமைப்புக்கு என்ன காரணம் என்பது தெரியாமல் குழப்பிப் போயுள்ள விஞ்ஞானிகள், பல நூறு மீற்றர்கள் விட்டமுள்ள விண்பொருள் (விண்கல் அல்லது ஏதேனும் வால்நட்சத்திரம்) வியாழனின் மேற்பரப்பில் மோத அதன் போது எழுந்த தூசிகள் மற்றும் மீதிகள் அடங்கிய வாயுக் கோளம் வியாழனின் வளிமண்டலத்தில் ஏற்படுத்திய விளைவின் பயனாக அது தோன்றி இருக்கலாம் என்று கூறுகின்றனர்.

15 ஆண்டுகளுக்கு முன்னரும் 1994 இல் வியாழனோடு Shoemaker-Levy 9 என்ற வால்வெள்ளி மோதிய போது அதுவும் நாசாவால் கபிளின் துணை கொண்டு படம்பிடிக்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

கபிள் தொலைநோக்கி மிகச் சமீபத்தில் தான் நாசா விண்வெளி வீரர்களால் விண்வில் வைத்து சரிபார்க்கப்பட்டு மிகத் தெளிவான வகையில் ஒளிப்படங்களைப் பிடிக்க தரமுயர்த்தப்பட்டிருந்தது என்பதும் இங்கு நினைவுகூறத்தக்கது.

மேலதிக விபரங்கள் இங்கு.

Labels: , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 4:18 am

2 மறுமொழிகள்:

Blogger வடுவூர் குமார் விளம்பியவை...

இதை கண்டுபிடித்தது யாரோ ஒரு தனிமனிதர் என்று படித்த ஞாபகம்.

Sat Jul 25, 05:11:00 am BST  
Blogger kuruvikal விளம்பியவை...

ஆம் வடுவூர் குமார். ஒரு கரும்புள்ளி முதலில் ஒரு அவுஸ்திரேலிய வானியலாளரால் தான் அவதானிக்கப்பட்டுள்ளது.

ஆனால் கபிள் தான் தெளிவான படம் பிடித்து அனுப்பியுள்ளது.

Sat Jul 25, 05:33:00 am BST  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க