Thursday, July 23, 2009

தேனீக்கள் தயாரிக்கும் மருந்து.



சமுதாயமாக வாழப் பழகிக் கொண்டுள்ள தேனீக்கள் தங்களின் மெழுகாலான கூட்டை நுண்கிருமிகளில் இருந்து சுத்தப்படுத்தி வைத்திருக்க என்று ரெசின் (resin) என்றழைக்கப்படும் ஒருவகை உடலிரசயானத்தைச் சுரந்து அவற்றினை மெழுகோடு கலந்து கூடுகளை அமைப்பதாகவும் அந்த ரெசின் இரசாயனம் பக்ரீரியாக்கள், வைரசுக்கள் என்று நுண்ணங்கிகளின் வளர்ச்சியை தடுக்கக் கூடிய இயல்பைக் கொண்டிருப்பதாகவும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

பொதுவாகவே தேன் உடல்நலத்துக்கு நல்லது என்பார்கள். ஆனால் இப்போது தேன்கூட்டில் இருக்கும் தேனீக்களின் சுரப்பான இந்த ரெசின் என்ற கூறு மனிதர்களில் நோய்களை உருவாக்கக் கூடிய பக்ரீரியாக்கள் மற்றும் வைரஸ்கள் போன்ற நுண்கிருமிகளை மற்றும் புற்றுநோய்க் கலங்களின் பெருக்கத்தைக் கூட கட்டுப்படுத்தப் கூடிய இயல்பைக் கொண்டிருப்பதாகக் கூறுகின்றனர்.

அதுமட்டுமன்றி தேன்கூட்டில் இருக்கும் இந்த இரசயானம் எயிட்ஸ் வைரஸான HIV- 1 இன் மீது கூட தாக்கம் செய்வதாகக் கண்டறிந்துள்ளனர். ஆனால் அதன் தாக்கத்தின் விளைவுகள் குறித்து தெளிவாகச் சொல்லப்படவில்லை.

தேன் உடலுக்கு நல்ல மருந்து என்று எம் மூதாதையோர் அனுபவத்தில் பகிர்ந்து கொண்டது உண்மையாகவே இப்போது நிரூபிக்கப்பட்டு வருகிறது. அதற்காக நம் மூதாதையோர் சொன்னவை எல்லாம் அறிவியல் மயமானவை என்பது பொருள் அல்ல. மூடநம்பிக்கைகளும் இருக்கின்றன. ஆனால் எதனையும் அறிவியல் கொண்டு நிறுவ முதல் மூடநம்பிக்கை என்று தட்டிக்கழிப்பது கூடாது என்பதையே இந்தக் கண்டுபிடிப்புக்கள் உணர்த்துகின்றன.

இவ்வாய்வு தொடர்பான மேலதிக தகவல்கள் இங்கு.

Labels: , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 4:05 pm

3 மறுமொழிகள்:

Blogger ஐந்திணை விளம்பியவை...

நன்றி

Thu Jul 23, 05:09:00 pm BST  
Anonymous Anonymous விளம்பியவை...

பயனுள்ள நல்ல பதிவு. மாற்று மருத்துவ முரையில் ராயல் ஜெல்லி என்ற பெயரில் தென்குகூட்டில் இருந்து எடுக்கப்பட்ட ரெசினில் இருந்து பிரித்து எடுக்கப்பட்ட பொருளை பயன்படுத்துகிறார்கள். மனம் , தலை முடி மற்றும் தோல் சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு சிறப்பான பயன்களை அளிப்பதாக சிலர் கூறுகிறார்கள்.

ஹாலிவுட் பிரபலங்கள் தங்களின் இளமை க்கு இதை பயன்படுத்துவதாக படித்து இருக்கிறேன். குறிப்பாக அனைத்து வைட்டமின் B சத்துக்களும் நிறைவாக உள்ளதாக நம்புகிறேன்

சிவா.

Thu Jul 23, 07:01:00 pm BST  
Blogger kuruvikal விளம்பியவை...

உங்கள் கருத்துச் சரியாக இருக்கலாம் சிவா. ஏனெனில் தேனை தேனீக்கள் சம்பந்தப்பட்ட பொருட்களை மருந்தாகப் பாவிப்பது வழமை. ஆனால் இப்போது தான் அவர்கள் அதன் மருத்துவக் குணத்துக்கான சரியான இரசயானத்தை இனங்கண்டு அதன் பங்களிப்பு என்ன என்பதை விளங்கத் தலைப்பட்டுள்ளனர்.

நன்றி சிவா உங்கள் கருத்துப் பகிர்விற்கு.

Thu Jul 23, 08:46:00 pm BST  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க