Friday, November 19, 2010

CERN மற்றும் எதிர் திடப்பொருள் (Antimatter) பற்றிய காணொளி.





சேர்னின் (CERN) அடிப்படை நோக்கம் எதிர் திடப்பொருளை (அன்ரிமற்றர்) கண்டறிவதல்ல. அது ஏலவே அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒப்பீட்டளவில் சிறிய அளவிலான பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளதுடன்.. காந்தப்புலத்தில் சேமிக்கப்பட்டும் உள்ளதாம். எதிர் திடப்பொருளுக்கு நேர் திடப்பொருளைக் (திடப்பொருளால் ஆனதே எமது பூமி.. எமது உடல் இவை எல்லாம்.) கண்டாலே பிடிக்காது. அதனால் அது அனிலேற்றாகி விடுகிறது.. சிதைந்து விடுகிறது.

அதுமட்டுமன்றி ஒரு கிராம் அன்ரி மற்றரை உருவாக்க (தற்போதைய தொழில்நுட்பப்படி) மில்லியன் ஆண்டுகள் ஆகும். அந்த அடிப்படையில் அன்ரி மற்றரை எரிபொருளாக்கி நீண்ட விண்வெளிப் பயணம் செய்வதென்பது எப்போது சாத்தியம் ஆகும்..??! அதுபோக அன்ரி மற்றர் பற்றிய அறிமுகம் 1920 களிலேயே வெளிவந்தும் விட்டது. இது ஒரு புதிய விடயமும் அல்ல. இலத்திரனிற்கு எதிர் பொசித்திரன் கண்டுபிடிக்கப்பட்டதோடு இது ஆரம்பமாகி விட்டது.

சேர்னின் உண்மை நோக்கம்.. திடப்பொருளின் திணிவை ஆக்கி இருக்கும் அடிப்படை கூறை கண்டறிவதுதான் அதாவது கடவுளின் துகளை கண்டுபிடிப்பதுதான். உண்மையில் அது நிறைவேறியதாக தெரியவில்லை. அடிப்படையில் சேர்ன் அந்த விடயத்தில் தோல்வியடைந்துள்ளதாகவே கொள்ள வேண்டி உள்ளது. அதைச் சமாளிக்க.. இப்போ ஏலவே சிறிய அளவிலான பரிசோதனையில் கண்டறியப்பட்டதற்கு முக்கியம் அளிக்கின்றனரோ என்று எண்ணத் தோன்றுகிறது.



Labels: , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 12:14 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க