Friday, January 07, 2011

மர்மமாக இறக்கும் பறவைகள் - வேற்றுக்கிரகவாசிகளின் வேலையா..?!



இவ்வாண்டின் (2011) ஆரம்பத்தில் இருந்து அமெரிக்காவில் கடந்த சில தினங்களாக பறவையினங்கள் சில மர்மமாக நூற்றுக்கணக்கில் இறந்து விண்ணில் இருந்து விழுகின்றன. ஆராய்ச்சியாளர்களோ மூளையைப் போட்டு கசக்கினது தான் மிச்சம்... இவற்றின் சாவுக்கு விடை இன்னும் புரியவில்லை.

அமெரிக்காவில் மட்டுமன்றி இத்தாலியிலும் இது தொடர்ந்திருக்கிறது.

அமெரிக்காவில் பறவைகளின் இந்த திடீர் உயிரிழப்புக்கு பல வகை காரணங்கள் சொல்லப்பட்டாலும்.. வேற்றுக்கிரகவாசிகளின் பிரவேசக் கலங்களுடனான மோதல் மற்றும் அமெரிக்க இராணுவம் செய்மதிகளின் உதவிகொண்டு செய்யும் உயர்சக்தி ஆயுதங்களின் பரிசோதனைகளின் விளைவென்பது கொஞ்சம் புதிதாகவும் வேறுபட்டும் இருக்கின்றன.

ஆனால் இந்தப் பறவைகள் நோய் தொற்றால் இறக்கவில்லை என்பதை மட்டும் தற்போதைக்கு உறுதி செய்திருக்கிறார்கள். வேறு சிலர் காலநிலை மாற்றத்தை குறை சொல்கிறார்கள். வேறு சிலர் நஞ்சாதல் விளைவு என்கிறார்கள். வேறு சிலர் வானவேடிக்கையால் எழும் ஒலிகளின் விளைவு என்கின்றனர். சிலர் மின்னல் தாக்கம் என்கின்றனர். மேலும் சிலரோ உயர்ந்த இட அழுத்த தாக்கம் என்கின்றனர்.

பறவைகள் மட்டுமன்றி மீன்களும் ஆயிரக்கணக்கில் இறந்திருக்கின்றன.

சரி இப்படி ஒரு மர்மச் சாவு மனித சமூகத்தை எட்டிப்பார்த்தால் என்னாவது.. சிந்தித்துப் பாருங்கள்..???! போற வாற இருக்கிற மனிதர்கள் எல்லாம் காரணம் கண்டுபிடிக்க முதலே பொத்து பொத்தென்று விழ வேண்டியது தான்.




மேலதிக தகவல் இங்கு.

Labels: , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 10:49 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க