Wednesday, January 12, 2011

பூமி போன்ற புதிய கிரகம் கண்டுபிடிப்பு.



விண்வெளியில் கிரகங்களை ஆய்வு செய்வதற்காக அமெரிக்காவில் நாசா விஞ்ஞானிகள் கெப்லர்-10 என்ற செயற்கைகோளை விண்ணில் செலுத்தியுள்ளனர். அதில் பொருத்தப்பட்டுள்ள சக்தி வாய்ந்த டெலஸ்கோப் விண்வெளியில் உள்ள கிரகங்களை போட்டோ எடுத்து பூமிக்கு அனுப்பி வருகிறது.

சமீபத்தில், கெப்லர்-10 செயற்கை கோள் ஒரு புதிய கிரகம் இருப்பதை கண்டு பிடித்து அனுப்பியுள்ளது. அது சூரிய கும்பத்தை விட்டு வெளியே உள்ளது. பூமியை போன்று தோற்றம் கொண்டது. இது முழுவதும் பாறைகளால் ஆனது. அது நட்சத்திர கூட்டங்களை சுற்றி வருகிறது.

இந்த கிரகத்துக்கு கெப்லர்-10பி என்று பெயரிடப்பட்டுள்ளது. இங்கு கடுமையான வெப்பம் நிலவுகிறது. அதாவது 1371 டிகிரி சென்ரிகிரேடுக்கு மேல் வெப்பம் உள்ளது. “எனவே, இங்கு மனிதர்கள் வாழ முடியாது. எனவே தான் இது உயிரினங்கள் வாழத் தகுதியற்றது.

இந்த தகவலை நாசா விஞ்ஞானிகள் நாசா விண்வெளி நிறுவனத்தின் கெப்லர் திட்ட விஞ்ஞானி டக்ளஸ் ஹட் ஜின் தெரிவித்துள்ளார். மேலும், இந்த கிரகத்தில் காபன் உள்ளிட்ட இரசாயன பொருட்கள் இல்லை.

எனவே, இங்கு ஆர்.என்.ஏ. (RNA) மற்றும் டி.என்.ஏ. (DNA) மூலக்கூறுகள் தோன்ற வாய்ப்பு இல்லை. ஆகவே பூமியை போன்று இங்கு உயிரினங்கள் வாழ முடியாது. என்று நாசா வின் மற்றொரு விஞ்ஞானி நடாலி படால்கா தெரிவித்துள்ளார்.


நன்றி: யாழ்.கொம்

Labels: , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 1:11 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க