Thursday, October 20, 2011

பொடிப்பசங்க என்னத்தை செய்திடுவாங்க...

எல்லாம் ரீன் ஏஜ் பசங்க.. 12 முதல் 20.. 22 வயது வரைதான் இருக்கும். உலகின் சில மூலைகளில் இருந்து வந்து.. லண்டனில் ஒரு ரகசிய கூட்டத்தைக் கூட்டி சந்திக்கிறாங்க. ஏன் இந்த ரகசிய சந்திப்பு.. காரணம்.. அவங்களுக்கு தரப்பட்டுள்ள பெயர்.. jailbreakers.

என்ன இந்த வயசிலேயே ஜெயிலை பிரேக் பண்ணி தப்பிடுறாங்களா என்று நீங்கள் நினைக்கக் கூடும்... ஆனால் அவங்க பிரேக் பண்ணுறது சாதாரண ஜெயில் இல்லை. அப்பிள் நிறுவனத்தின் நவீன ஐபோன் தொடங்கி.. ஐபாட்.. ஐபொட்.. என்று போய் சொனி பி(p)எஸ் 3 மற்றும் கூகிள் அன்ராயிட் வரை அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதுதான் இந்தப் பையன்களின் பொழுதுபோக்கே.

இதனால் என்ன நன்மை.. அவங்களுக்கு.. என்று கேட்கிறீங்களா. இந்த ஜெயில்பிரேக் செய்யப்பட்ட அப்பிள் மற்றும் இதர இலத்திரனியல் பொருட்கள் மீது அந்தந்த நிறுவனங்கள் விதித்துள்ள கட்டுப்பாட்டை மீறி நாங்கள் அவற்றை எமது விருப்புக்குரிய அப்பிளிகேசன்களை தரவிறக்கி பாவிக்கலாம். இதற்கு ஆகும் செலவு கிட்டத்தட்ட எதுவும் இல்லை. ஆனால் இந்தப் பையங்களுக்கோ.. இந்த மென்பொருட்களை விற்பதன் மூலம் வருவாய் கிடைக்கிறது. இவர்களிடம் பெரிய இணையத்தளங்கள் கிடையா. வெறும் புளக்குகளை வைத்தே.. தங்கள் மென்பொருட்களை அறிமுகம் செய்து விடுகின்றனர். அவையோ..மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களை இழுத்து வந்துவிடுகின்றன. அப்புறம் என்ன.. ஒரு சிறிய கட்டணத்தோடு.. ஊடுருவல் மென்பொருட்களை மெருகேற்றி சந்தையில் விடுகின்றனர். போதிய வருவாயும் கிடைக்கிறது.

சரி.. இதைச் செய்ய இவர்கள் என்ன பெரிசா படிக்கிறாங்க. எதுவும் இல்லை. செய்வது.. என்னவோ.. ஆன்லைனில் சாட்டிங். அதுவும் சும்மா பெட்டையளோட இல்லை. காரியத்தோட.. தகவல்களைப் பரிமாறிக் கொண்டு.. ஹாக்கிங் பற்றி அறிந்து கொள்கிறார்கள். அந்த அறிவைப் பயன்படுத்தி.. ஊடுருவல் மென்பொருட்களை தயாரித்து.. பெரிய பெரிய நிறுவனங்களின் உற்பத்திகளை கணப்பொழுதில் ஊடுருவ வழி செய்துவிடுகிறார்கள்.. இந்தப் பொடிப் பசங்க.

இந்தப் பொடிப்பசங்களின் செயலைக் கண்டு அப்பிள் நிறுவனமே ஆடிப்போய் இருக்கிறது. இதனைத் தடுக்க என்ன வழி என்று.. கவுண்டு கிடந்து யோசித்துப் பார்த்த அப்பிள்.. இப்படியான பசங்களின் திறமையை தான் பாவிச்சா என்ன என்ற முடிவுக்கு வர.. இப்போ.. இவர்களைத் தேடி ஓடுகிறது அப்பிள். பள்ளிப் படிப்பு முடித்து பல்கலைக்கழகம் போய்.. ஒரு வாரம் கூட ஆக முதலே.. பெரிய பெரிய நிறுவனங்களில் கொழுத்த சம்பளத்தோடு.. முதன்மை நிர்வாகிகள் நிலைக்கு வந்துவிடுகிறார்கள்.. இந்தப் பொடிப்பசங்க. இதை இப்படி வர்ணிக்கிறான் James Whelton என்ற பொடியன்.. "I did my final exams on a Friday, and became a chief executive on Monday.” இது அவங்க திறமைக்கு கிடைத்த பரிசு மட்டுமே.

இவன் பெயர் Aaron Ash. இவனின் ஊடுருவல் மென்பொருளை பாவிக்கிறவங்க தொகை என்ன தெரியுமா.. 3.5 மில்லியன் வாடிக்கையாளர்கள். எல்லோரும் அவனின் மென்பொருளுக்கு காசு கொடுப்பதில்லை. இருந்தாலும் இவன் தனது மென்பொருள் மூலம்.. சுமார் 100,000 டொலர்களை உழைத்து அதன் மூலம் கணணி விஞ்ஞானத்தில் பட்டப்படிப்பு படிக்கிறான். இன்னும் சிலரோ.. பல்கலைகழகம் போய் என்னத்தை வெட்டிக்கிழிக்கப் போறன்.. பேசாம.. இந்த நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு நிறுவனத்தை ஆரம்பிச்சா என்ன என்று பெரிய மென்பொருள் வியாபார நிறுவனங்களோடு கூட்டு அமைக்கப் புறப்பட்டு விட்டார்கள்.

ரீன்ஏஜ் பசங்க என்றால்... ஏதோ.. றோட்டில போற பெட்டையளோட சேட்டை விட்டுக் கொண்டு.. சண்டியன்களா.. திரியுற வயசு என்று நினைக்கிறவங்க உள்ள இந்த உலகத்தில.. ரகசியமா இருந்து.. வெளி உலகிற்கு தங்களை அடையாளம் காட்டாம.. பெரும் செல்வந்தர்களாக மாறிக் கொண்டிருக்கும் இப்படிப் பசங்களும் இருக்காங்க.. என்றதை நீங்கள் உணரனும்.. பாருங்க.

சரி நான் ஏன் இதனை இங்க பகிர்ந்து கொள்ளுறன் என்று நினைக்கிறீங்களா.. நமக்கெல்லாம் ஹாக்கிங் செய்ய பயம். அதுவும் இன்றி அந்தத் தொழில்நுட்பத்தை அறிஞ்சு அதில மிணக்கடப் பஞ்சி வேற. இந்தப் பொடிப்பசங்க... விடுற மென்பொருட்களை சுட்டு பாவிக்கிறதே நம்ம தொழில்.அதுதான்.. நாம பயன்பெற நமக்கு தெரியாம... நமக்காகவும் உழைச்சவங்க பற்றி கொஞ்சம் சொல்லத்தானே வேணும்.. அது தான் ஒரு செஞ்சோற்றுக் கடனுக்காக இதனை பதிகிறேன்.

மூலப் பதிவு இங்கு..   -  நன்றி யாழ் இணையம்.

Labels: , ,

பதிந்தது <-குருவிகள்-> at 9:02 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க