Sunday, February 12, 2012

எங்கள் வலைப்பூ (புளாக்) உங்கள் ஐபோன், ஐபொட்,ஐபாட் மற்றும் மொபைலில்..!

மாறி வரும் உலகில்.. இணைய மற்றும் இலத்திரனியல் வசதிகளுக்கு மாறிக் கொண்டே இருக்கின்றன. அதற்கு ஏற்ப நீங்கள் எங்கள் வலைப்பூக்களிலும் இலகுவாகவும் விரைவாகவும் விடயங்களைப் படிக்க அறிந்து கொள்ள வசதிகளும் செய்யப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.

அந்த வகையில் எங்கள் வலைப்பூவில்.. எங்கள் ருவிட்டர் செய்திகளை இட்டு வருகிறோம். அதன் தொடர்ச்சியாக இப்போ.. எமது வலைப்பூக்களின் அலைபேசி உபகரணங்களுக்கான பிரதிகளை உங்களுக்காக புளாக்கரின் உதவியோடு வெளியிட்டிருக்கிறோம்.

நீங்கள் தமிழிலேயே எங்கள் பதிவுகளை உங்களை ஐபோன்.. ஐபொட்.. ஐபாட் மற்றும் இதர மொபைல் டிவைஸ் களில் நீங்கள் இருந்த இடத்தில் இருந்து கொண்டு படிக்கலாம்.  உங்கள் உபகரணங்களில் (டிவைஸ்களில்) இணைய வசதி இருந்தால் எமது வலைப்பூ முகவரியை ( kuruvikal.blogspot.com )  பாவித்து நீங்கள் எமது வலைப்பூவிற்குச் செல்லலாம். அங்கு உங்கள் உபயோகமான பதில் கருத்துக்களையும் பரிந்துரைகளையும் குறை நிறைகளையும் பரிமாறி கொள்ளலாம்.

உங்களின் உச்ச பயனே எங்களின் மனத் திருப்தி. நாங்கள் எந்த வியாபார நோக்கமில்லாமலும்.. மிக நெருக்கடியான நேர அட்டவணையிலும் தமிழ் மொழியில் தமிழ் இனத்தினையும் அறிவியல் மற்றும் பிற சமூக.. அரசியல் விடயங்கள் விரைந்து சென்றடைய வேண்டும் என்ற வகையில் இந்த வலைப்பூக்களை 9 (2003-2012) ஆண்டுகளாக இயக்கி வருகிறோம்.

ஆரம்பத்தில் இருந்தும்.. இப்போதும் எமக்கு ஆதரவு தரும் உலகெங்கும் பரந்து வாழும் வலைப்பூ வாசக உள்ளங்களுக்கு மிக்க நன்றி. எமது வலைப்பூ பார்வை எண்ணிக்கை 60,000 கடக்க உள்ள நிலையில் இதனைப் பதிவிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். கிட்டத்தட்ட 15 க்கும் மேலான நாடுகளைச் சேர்ந்த தமிழ் மொழி மூல.. வாசகர்கள் நம் வலைப்பூ வாசகர்களாக உள்ளதை இட்டு பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.

நன்றி.  

குருவிகள் மற்றும் எமது வலைப்பூ பங்காளிகள். 

குறிப்பு: (எம்மிடம் இந்த வலைப்பூ உட்பட 4 வலைப்பூக்கள் மட்டுமே உண்டு. வேறு வலைப்பூக்கள் கிடையா.)

Labels: ,

பதிந்தது <-குருவிகள்-> at 8:28 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க