Monday, February 27, 2012

பெண்ணின் சூலகத்தில் இருந்து எண்ணிக்கையற்ற முட்டைகளை உருவாக்க முடியும்.

மனிதப் பெண்கள் பிறக்கும் போதே முட்டை உற்பத்தி செய்து கொண்டு பிறந்து விடுவதாகவே இவ்வளவு காலமும் நம்பப்பட்டு வந்த நிலையில்.. தற்போது மூலவுயிர்க்கல ஆய்வு மூலம் (stem cell research).. பெண்களின் சூலகத்தில் இருந்து பெறப்படும் மூலவுயிர்க் கலங்களைக் கொண்டு வளமான எண்ணி அளவிட முடியாத அளவுக்கு முட்டைகளை உருவாக்க முடியும் என்று அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

எலிகளில் நடத்தப்பட்டுள்ள ஆய்வுகளில் இருந்து இந்த முடிவு எட்டப்பட்டிருந்தாலும் இது மனிதர்களிலும் செயற்படுத்தப்பட முடியும் என்று நம்புகிறார்கள் அறிவியலாளர்கள்.

இது.. IVF மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பும் பெற்றோர்களுக்கும்.. பல்வேறு காரணங்களால் இயற்கையாக முட்டை உற்பத்தியற்றிருக்கும் பெண்களுக்கும் முட்டைகளை இவ்வழியில் உருவாக்கி செயற்கை முறையில் கருத்தரிக்க வைத்து குழந்தைகளை பிறப்பிக்க வழி செய்ய முடியும்..!

அதுமட்டுமன்றி.. இந்த ஆய்வு முழுமையாக வெற்றி பெற்றால்.. எதிர்கால மூலவுயிர்க்கல ஆராய்ச்சிகளுக்கு தேவையான அளவு முட்டைகளையும் ஆய்வாளர்கள் பெற்றுக் கொள்ள வழி பிறக்கும்..!

மேலதிக தகவல் இங்கு.

Labels: , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 1:20 pm

2 மறுமொழிகள்:

Blogger Sivamjothi விளம்பியவை...

பெண்கள் உடல் மிகவும் பதிப்பு அடையும். முடிந்த அளவு சித்தா ஆயுர்வேதம் மருந்தை
பயன்படுத்துவது நல்லது.

முட்டை அதிக படுத்தினால் ஹார்மோன் சமநிலை கெடும்.

யோகா உடல் பயிற்சி செய்து உடம்பை நன்றாக வைத்து கொள்வது நலம்

Mon Feb 27, 04:58:00 pm GMT  
Anonymous Anonymous விளம்பியவை...

Kenayia

Fri Aug 09, 05:44:00 am BST  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க