Friday, March 09, 2012

வேர்ஜின் கடலடி விமானம்..!

வேர்ஜின் நிறுவனத்தின் நிறுவனர் Richard Branson இன்று உலகின் பார்வையில் முக்கியமானவராக திகழ்கிறார். காரணம் அவர் வேர்ஜின் நிறுவனத்தின் மூலம் புதிய கண்டுபிடிப்புக்களை மனித சமூகத்திற்கு கையளிப்பது தான்.



அந்த வகையில் விண்வெளிக்கு சுற்றுலாச் செல்லத்தக்க விண்ணோடம் ஒன்றை தயாரித்து வேர்ஜின் நிறுவனம் சார்பாக இயக்கத் திட்டமிட்டுள்ள றிசாட், தற்போது மனிதன் செல்ல முடியாதிருந்த அளவு ஆழத்திற்கு சமுத்திரங்களுக்கு அடியில் செல்லத்தக்க ஒருவர் பயணிக்கக் கூடிய கடலடி  விமானத்தை கண்டுபிடித்து வடிவமைத்துள்ள அவர் அதன் மூலம் சமுத்திரங்களுக்கு அடியில் புதைந்திருக்கும் நாம் காணா உலகை நமக்கு காட்ட போகிறார்.

விண்வெளிக்கு மனிதனை அனுப்ப ஆகும் செலவை விட கடலுக்கு அடியில் சில கிலோமீற்றர்கள் ஆழம் வரை மனிதனை அனுப்ப ஆகும் செலவும் தேவைப்படும் தொழில்நுட்பமும்.. அதிகம் தேவைப்படுகிறது. றிச்சாட்டின் இந்தக் கண்டுபிடிப்பின் மூலம் கடலுக்கு அடியில் ஏறத்தாழ 36,000 அடி ஆழத்திற்கு மனிதன் சென்று அங்குள்ள காட்சிகளை தரிசிக்க முடிவதோடு.. எம்மிடம் இருந்து அந்நியப்பட்டுள்ள உயிரினங்களையும் காண முடியும் என்று நம்புகிறார்கள்.. றிசாட்டின் சாதனைகளை வரவேற்போர்.

Labels: , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 2:12 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க