Thursday, March 15, 2012

உலோக - உலோக செயற்கை மூட்டுக்கள் உயிரைக் காவு கொள்ளும் ஆபத்து.

இடுப்பு - தொடை எலும்புகள் சந்திக்கும் இடத்தில் உள்ள மூட்டுப் பகுதி போன்ற மூட்டுக்களில் நிகழும் தேய்மானம் அல்லது முறிவு காரணமாக உள்வாங்கப்படும் நோயாளிகளில் மேற்கொள்ளப்படும் உலோக- உலோக செயற்கை எலும்பு மூட்டு மாற்றீடு என்பது ஆபத்தான பக்க விளைவுகளை உண்டு பண்ணுவது பிரித்தானியாவில் பிரிஸ்டல் பல்கலைக்கழக ஆய்வு ஒன்றில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது.

நவீன மருத்துவத்தில் இவ்வாறான செயற்கை மூட்டுக்களின் பயன்பாடு பல நோயாளிகள் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப உதவி உள்ள நிலையிலும்.. நீண்ட கால நோக்கில்.. இந்த உலோகங்களில் ஏற்படும் தேய்மானம் காரணமாக உருவாகும் நுண் உலோகத் துகள்கள் தசை.. எலும்பு.. மற்றும் நரம்புப் பாதிப்புக்களுக்கு இட்டுச் செல்வது கண்டறியப்பட்டுள்ளது.

உலோக  - உலோக மூட்டுக்களே அதிக தோல்வியை சந்தித்துள்ளன. இதைவிட உலோக- பிளாஸ்ரிக் மூட்டுக்களும்.. செரமிக் - செரமிக் மூட்டுக்களும் பாவனையில் உள்ளன. அவற்றின் தோல்வி வீதம் ஒப்பீட்டளவில் குறைவாகும்.

அதுமட்டுமன்றி பெண்களே ஆண்களை விட இந்த மூட்டு மாற்றீட்டில் அதிக தோல்வியை சந்திக்கும் ஆபத்தைக் கொண்டிருக்கிறனர். இந்த ஆய்வில் ஆண்களும் பெண்களுமாக 402,051 நோயாளிகளின் தரவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இதனிடையே இந்தப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வரை..  மூட்டு மாற்றீட்டு சத்திரசிகிச்சை செய்து கொண்டவர்கள் மற்றும் எதிர்காலத்தில்...செய்து கொள்பவர்கள் எவராயிலும் கிரமமான மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவது அவசியம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஏலவே சிலிக்கன் மார்பகங்களை மார்பக எடுப்புக்காக பெண்கள் பொருத்திக் கொள்ளும் நிலையில் அவர்களிலும் ஆபத்தான பக்க விளைவுகள் கண்டறியப்பட்டு அவற்றைப் பொருத்திக் கொள்வதில் இருந்து கட்டாய விலக்களிப்பு பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில்.. இந்த ஆய்வு  முடிவு நவீன மருத்துவத்திற்கு சவாலாக வந்துள்ளது.

மேலதிக தகவல் இங்கு.

Labels: , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 5:58 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க