Wednesday, April 18, 2012

சாத்திரம் சம்பிரதாயம் பரம்பரை நோய்கள் வருவதை தடுக்குமா..?!!

நவீன அறிவியல் மூன்று பிரதான வழிமுறைகளில் Genetic disorders ஐ கையாள்கின்றது. இவற்றுள் பல உப பிரிவுகள் உள்ளன.

1. prenatal screening ( கருத்தரித்த பெண்களின் முளையம் சார்ந்து மற்றும் கருக்கட்ட முன்.. கருவுக்கு காரணமாக உள்ள பெண் மற்றும் ஆணில் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள் வாயிலாக இதனை வினைத்திறன் உள்ள வகையில் செய்யலாம்). இதன் போது குறைபாடுகள் காணப்பட்டால்.. கருவுற முன் இந்த நிலை அவதானிக்கப்பட்டால்.. பெற்றோர் சரியான ஆலோசனை வழங்கி குழந்தையை உருவாக்க அனுமதிக்கப்படுவர். அப்படி அனுமதிக்கப்படும்.. கரு.. தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு.. குறைபாடு காணப்படின்.. பெற்றோர் விரும்பின் பேரில்.. கருவிலையே வைத்து அதனை கருக்கலைப்புச் செய்ய அனுமதி அளிக்கப்படும். இது மிகவும் வேதனையானது என்றாலும்.. அந்தக் குழந்தைகளின் எதிர்காலம் கருதி எடுக்கிற ஒரு முடிவாக கூட இது இருக்கலாம். அதுமட்டுமன்றி இது கூடாத மரபணுக்களின் பரம்பலைத் தடுக்கும். பெற்றோர் கருக்கலைப்புக்கு தயார் இல்லை என்றால் பிறக்கப் போகும் குழந்தை பற்றியும் அதன் பராமரிப்பு.. மற்றும் உதவிகள் குறித்தும் பெற்றோருக்கு கிரமமாக அறிவுறுத்துவார்கள். இது மேலை நாடுகளில். சிறீலங்கா போன்ற வறிய நாடுகளில்.. பரிசோதனைகள் செய்வதோடு சரி. பெற்றோரும் பிள்ளைகளும் கவனிப்பாரற்று விடப்படுதலே அதிகம் நிகழ்கிறது. இத்தகைய சுகாதார சேவை உள்ள நாடுகள் தம் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். யுத்தத்திற்கும்.. இராணுவச் செலவிற்கும் கொட்டும் பணத்தை இவ்வாறான மக்களின் சுகாதார சேவைகள் நோக்கி திருப்பி விடுதல் அவசியம்.

2. PGD - pre-implantation genetic test (இதன் மூலம் தாய் தந்தையரில் இருந்து அனுகூலமில்லாத மரபணுக்கள் குழந்தைகளில் பரப்பப்படுவது தடுக்கப்பட முடியும். இது பொதுவாக.. IVF சிகிச்சையாளர்களில் அவர்களின் முளையங்களில் மேற்கொள்ளப்படும்.)

Posted Image

3. Gene therapy - இதன் மூலம் குறைபாட்டோடு ஒருவர் பிறந்து விட்டால்.. அவரின் உடலில் செயற்படும் அல்லது செயற்பாடற்று இருக்கும் தவறான மரபணுக்குப் பதிலாக செயற்படக் கூடிய நல்ல மரபணுவைச் செலுத்தி குறைபாட்டை நீக்குதல். இந்த முறை சிகிச்சைகள் முழு அளவில் இல்லை என்றாலும் இன்று பல குறைபாடுகளுக்கு மேற்கொள்ளப்படக் கூடியனவாக உள்ளன. இருந்தாலும் இவை இன்னும் பல ஆராய்ச்சிகள் மூலம் மேம்படுத்தப்பட வேண்டிய நிலையில் உள்ளன.

மேலும்.. மச்சான் - மச்சாள் , மாமா - அக்காள் மகள்  திருமணம் போன்ற நெருங்கிய உறவுகளுக்குள் செய்யும் திருமணங்கள் மூலம்.. gene pool சிறியதாக்கப்படுவதால்.. கூடிய அளவு பரம்பரை நோய்கள் அங்கு வெளிப்படுத்தப்பட வாய்ப்புள்ளது..! மறைக்கப்பட்டுள்ள காவி பரம்பரை அலகுகள் இவர்களிடத்தில் அதிகம் மீள் சோடிச் சேர்க்கை அடைய வாய்ப்புள்ளதால்.. பிறக்கும் குழந்தைகளிடம் பரம்பரைக் குறைபாடுகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது..! ஆனால் அதுவே இவ்வாறான பரம்பரை குறைபாடுகளுக்கு ஒரு தனிக்காரணம் அல்ல..!

என்னைக் கேட்டால் எதிர்காலத்தில் மனிதர் எல்லோருக்கும்.. பரம்பரை குறைபாடுகளுக்கு நோய்களுக்கு எதிரான genetic screening செய்யப்பட வேண்டும். அவர்களின் தரவுகள்.. ரகசியமாகப் பேணப்பட்டாலும்.. தேவையான சந்தர்ப்பங்களில்.. அவர்கள் அதனை தமது விருப்புக்கு ஏற்ப வெளியிட அனுமதிக்கப்பட வேண்டும். இதன் மூலம் பரம்பரை நோய்கள் பரவுவதை தீவிரமாக கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் அறிவுறுத்தவும் முடியும். இது.. குருட்டுத்தனமாக குறிப்புப் பார்ப்பதைக் காட்டிலும் பல மடங்கு வினைத்திறன் உள்ளதாக இருக்கும்..!

வெளி.. ஆதார இணைப்பு

மனங்களின் எண்ணப் பொருத்தம் என்பதும் அவ்வளவு சாத்தியமில்லை. அதாவது tuning brain wave frequency (மூளை அலை மீடிறனை ஒத்திசைவாக்கல்) என்பது அவ்வளவு சுலபமான காரியமில்லை. இதற்கு குறிப்பிட்ட தனிநபர்கள் நிறைய விட்டுக்கொடுப்புக்களை செய்ய வேண்டி இருக்கும். அதற்கு எல்லாம் எப்போதும் சந்தர்ப்பம் அமையாது. திருமணமான புதிதில்.. ஒருவர் உடலை மற்றவர் ரசிக்கும் அக்கறையில் இருக்கும் விட்டுக்கொடுப்புக்கள்.. உடல்கள் பரீட்சையமானதும்... தேவைகள் முடிந்ததும்.. அல்லது குறைந்ததும்.. இருக்காது. அங்கு வேற எண்ண அலைகளே எழும். அவற்றுக்கிடையே.. மீள ஒத்திசைவு என்பது சுலபமானது அல்ல. இவை எல்லாம்.. அன்பு.. நம்பிக்கை என்று இன்னும் பல எண்ண அலைகளிலும் தன்மையிலேயே தங்கியுள்ளன. அன்பினை வெளிக்காட்ட முடியாது தவிக்கும் பலர் உளர்.

ஏன் எம் தமிழர்களில் பலர் கணவன்.. மனைவியையோ.. மனைவி கணவனையோ முத்தமிடுவது குறைவு. மேலும்.. தொடுகைகள் குறைவு. அரவணைப்புக் குறைவு... (huddling) (இது பாலியல் புணர்ச்சி அல்ல.. சாதாரண அரவணைப்பு ). தமிழர்கள் வாழ்வியலில்.. மனிசி.. பிள்ளை பெறு.. பராமரிப்பு.. சமையல் செய் இயந்திரம்.. மனிசன் காசுழைக்கும் ஏ ரி எம் மிசின். இப்படி இருக்கும் தமிழர் வாழ்வில்.. எப்படி.. எண்ண அலை மீடிறன் ஒத்திசைவாக்கம் நிகழும்..???! இதனை எந்தக் குறிப்பாலும் நிவர்த்தி செய்ய முடியாது.

தமிழர்களின் சமூக மற்றும் வாழ்வியல் நடத்தைகளில் மாற்றம் வராது எண்ண அலை ஒத்திசைவாக்கம் என்பது வலிந்துதான் ஏற்படுத்தப்பட வேண்டி இருக்கும். அதுதான் தமிழர்களிடம் அதிகம். ஒன்றில் கணவனை விட்டு மனைவி பிரிய முடியாத சூழலை உருவாக்கி அவளை அதற்குள் அடைத்து வைப்பது அல்லது மனைவியை விட்டு கணவன் பிரிய முடியாத சூழலை உருவாக்கி அதற்குள் அவனை அடக்கி வைப்பது. இதுதான் எம்மவர் வாழ்வியல். இதற்கு குறிப்பு.. சாத்திரம் போன்ற பயங்காட்டல்கள் அவசியம். இவற்றின் பின்னால் எந்த அறிவியலும் சமூகவியலும் இல்லை..! இந்த நிலையில் இயல்பான மூளை அலை ஒத்திசைவாக்கம் என்பதை எப்படி..வரவைக்க முடியும். அது அவ்வளவு இலகுவான காரியம் கூட இல்லை. :icon_idea:

(நன்றி: யாழ்)

Labels: , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 10:11 am

0 மறுமொழிகள்:

Post a Comment

இந்த இடுகைக்கு மேலதிக தொடுப்புச் செய்ய:

Create a Link

<<முகப்புக்குச் செல்க